முகப்பு /செய்தி /இந்தியா / கொரோனாவுக்கு பயந்து பூட்டிய வீட்டுக்குள் 3 ஆண்டுகள் மகனை அடைத்து வைத்து வாழ்ந்து வந்த தாய்..!

கொரோனாவுக்கு பயந்து பூட்டிய வீட்டுக்குள் 3 ஆண்டுகள் மகனை அடைத்து வைத்து வாழ்ந்து வந்த தாய்..!

காட்சிப்படம்

காட்சிப்படம்

கொரோனாவின் பயத்தால் சுமார் 3 ஆண்டுகள் வீட்டுக்குள் அடைந்த கிடந்த 36 வயது இளம் தாய் மற்றும் 10 வயது சிறுவனை மீட்டெடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Haryana, India

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2020 ஜனவரி மாதம் முதல் தொடங்கி வேகமாகப் பரவியது. இதனால் பல உயிரிழப்புகளை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஹாரியான மாநிலத்தில் குருகிராம் பகுதியில் வசிக்கும் குடும்பத்தில் 36 வயது தாய் கொரோனா பயத்தால் 10 வயது சிறுவனுடன் சுமார் 3 ஆண்டுகள் வீட்டுக்குள் அடைந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்முன் மாஜி என்ற 36 வயது இளம்பெண், சக்கர்பூர் பகுதியில் உள்ள 2 அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் 10 வயது மகன் மற்றும் கணவர் சுஜன் மாஜி ஆகியவருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தவுடன் அதன் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்துள்ளார். மேலும் தனது 10 வயது மகனையும் வீட்டுக்குள் வைத்து வெளியே விடாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.

கொரோனாவின் நிலை சரியாகத் தொடங்கியதும் அவரின் கணவர் சுஜன் வேலைக்காக வீட்டை விட்டு அலுவலகம் சென்றுள்ளார். இதனால் அவரை கூட வீட்டுக்குள் விடாமல் அருகில் தனி வீடு எடுத்துத் தங்கச் சொல்லியுள்ளார். இப்படி சுமார் 3 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறாமல் தனது மகனுடன் அவர் இருந்து வந்துள்ளார். கணவர் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வீட்டின் வாசலில் வைத்து வந்துள்ளார்.

கணவர் மற்றும் உறவினர்கள் கூறியும் அவர் வெளியில் வர மறுத்த நிலையில், கணவர் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து மனநல நிபுணர்களுடன் பேசி அளித்த புகாரின் பெயரில் கடந்த புதன்கிழமை அன்று தாய் மற்றும் மகனை வீட்டை உடைந்து மீட்டுள்ளனர்.

இதில் 10 வயது மட்டும் ஆன சிறுவன் 3 ஆண்டுகளாகச் சூரியன் ஒளியே படாமல் இருந்துள்ளான் என்ற உண்மை வெளிவந்துள்ளது. இதனால் தாய் மற்றும் மகனின் உடல் நிலை சோர்வு அடைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் தாய் வீட்டை விட்டு வெளியில் வர மறுத்த நிலையில், மனநல நிபுணர்கள் அவரின் உடல் நிலை சரிபார்க்கத்தான் கேட்பதாகக் கூறி அவரை வெளியில் வர வைத்துள்ளனர். பின்னர், பூட்டிய கதவுகளை உடைத்து மகனை மீட்டுள்ளனர்.

Also Read : அலெர்ட்..! ஆதாருடன் உங்கள் பான் கார்டை இணைத்துவிட்டீர்களா..? எளிதாக இணைக்க டிப்ஸ்..

தற்போது இருவரை உடல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 3 ஆண்டுகளாகச் சூரிய ஒளி கூடப்படாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்த நிலையில் இருவரின் உடல் மற்றும் மனநிலை சரியாக இல்லை மற்றும் 1 மாத கால சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவிற்கு பயந்து 3 ஆண்டுகளாக மகனுடன் வீட்டில் தாய் அடைந்து கிடந்த சம்பவம் குருகிராம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Covid-19, Haryana, Mother