அசாம் மாநிலம் கௌஹாத்தியைச் சேர்ந்தவர் பந்தனா கலிதா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் ஷங்கரியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக பந்தனாவிடம் காவல் துறையினர் துருவித் துருவி விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.
அமர்ஜோதி வேலையின்றி இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராக சேர்ந்த பந்தனாவுக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் ஒரு நண்பருடன் திருமணத்திற்கு மீறிய உறவிலும் இருந்துள்ளார்.
வேலைக்கு செல்ல வேண்டாம் என இவரது மாமியார் பந்தனாவை தடுத்துள்ளார். கடும் வாக்குவாதத்திற்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி பந்தனா தனது மாமியாரை கொலை செய்துள்ளார். நண்பர்களின் உதவியுடன் உடலை துண்டு துண்டாக வெட்டி 3 நாட்கள் பிரிட்ஜில் வைத்துள்ளார். இதன் பிறகு கார் மூலம் மேகாலயாவுக்குச் சென்று மலையில் இருந்து உடல் பாகங்களை இவரும் இவரது நண்பர்களும் வீசியுள்ளனர்.
பின்னர், இதே பாணியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி கணவரையும் கொலை செய்து, உடல் பாகங்களை அதே பகுதியில் உள்ள பள்ளத்தாக்குகளில் வீசியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் பந்தனா கலிதா மற்றும் அவரது நண்பர்கள் தந்தி டெகா, அருப் தேகா ஆகிய 3 பேரை அசாம் காவல்துறையினர் கைது செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, Crime News, Double murder, Husband died, Wife Attacks Husband