Home /News /national /

செல்போன் தொலைந்ததால் விரக்தி... மகன், கணவரை விட்டு பெண் தற்கொலை

செல்போன் தொலைந்ததால் விரக்தி... மகன், கணவரை விட்டு பெண் தற்கொலை

மாதிரி படம்

மாதிரி படம்

செல்போன் காணாமல் போனதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
    பீகார் மாநிலம் புர்னியா மாவட்டம் கஜஞ்சி பகுதியை சேர்ந்தவர் பிட்டு சிங். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நேரத்தில், அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன், தாய்க்கு நேர்ந்த சம்பவத்தை பார்த்து விட்டு, தந்தை பிடடு சிங்குக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அவர், வீட்டிற்கு திரும்ப போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பிட்டு சிங் கூறுகையில், 'என் மனைவி சில நாட்களுக்கு முன்பு செல்போன் காணாமல் போனதாக கூறினார். அவர் செல்போனை மிகவும் விரும்பக் கூடியவர்.' என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க : ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    தற்கொலை சம்பவம் தொடர்பாக கஜஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவில் நடந்தது கொலையா தற்கொலையா என்பது தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க : திண்டுக்கல் சிறுமி மர்ம மரணம்.. 4-வது நாளாக தொடரும் விசாரணை - மலைக்கிராமத்தில் போலீஸ் குவிப்பு

    தற்போது வரை கிடைத்த தகவலின் அடிப்படையில் உயிரிழந்தவர், செல்போன் காணமாமல் போனதால் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக, இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மனித உயிரை விட செல்போன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா என்ற கேள்வி இந்த சம்பவத்தின் மூலம் எழுந்துள்ளது.

    இதுகுறித்து உளவியலாளர்கள் கூறுகையில், 'தற்காலத்தில் நாம் அனைவரும் விர்ச்சுவல் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். அதாவது, கற்பனையாக நடக்கக்கூடிய விஷயங்கள் நம்முடைய இயல்பு வாழ்க்கையை பாதிக்கின்றன. இதனால்தான், மக்களிடம் பணம் இருக்கிறது ஆனால் மகிழ்ச்சி இல்லை. இதுபோன்ற தற்கொலை முடிவுகளுக்கு அளவுக்கு அதிகமான தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் வசதியான வாழ்க்கை முறை ஆகியவை முக்கிய காரணங்கள்' என்றனர்.

    இதையும் படிங்க : தில்லையில் தேரோடலைன்னா மன்னனுக்கு கேடு.. அரசு புரிஞ்சு நடக்கனும் - ஹெச்.ராஜா
    Published by:Musthak
    First published:

    Tags: Mobile phone, Suicide

    அடுத்த செய்தி