முகப்பு /செய்தி /இந்தியா / கணவன், இரு மகன்களை கொலை செய்து நாடகமாடிய பெண்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கணவன், இரு மகன்களை கொலை செய்து நாடகமாடிய பெண்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் நீலம்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் நீலம்

சொத்து தகராறு காரணமாக கணவர் மற்றும் இரு மகன்களை கொலை செய்து நாடகமாடிய இரண்டாவது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹாஜன்வான் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் குப்தா. 40 வயதான இவருக்கு திருமணமாகி ஆரவ் மற்றும் ஆர்யன் என இரு மகன்கள் உள்ளனர். அவதேஷ் குப்தாவின் முதல் மனைவி உயிரிழந்த நிலையில், எட்டு மாதங்களுக்கு முன்னர் நீலம் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இரண்டாவது திருமணத்திற்கு பிறகு அவேதஷ் குப்தா அவரது முதல் மனைவியின் மகன்களும், இரண்டாவது மனைவி நீலம் அவரது மகளும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி இரவு அன்று இரவு நீலம் காவல்நிலையத்திற்கு போன் செய்து தனது கணவர் மற்றும் மகன்களை யாரோ ஒரு மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக புகார் அளித்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், அவதேஷ் குப்தா மற்றும் அவரது மகன்கள் ஆர்யன், ஆரவ் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட கொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை மனைவி மீது சந்தேகப் பார்வை கொண்டு விசாரணையை மேற்கொண்டது. மனைவி நீலம் இடம் சுமார் எட்டு மணிநேரம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை அம்பலமானது.

இதையும் படிங்க: காதலியிடம் பேசிய நண்பன்... அந்தரங்க உறுப்பை துண்டித்து கொன்ற சைக்கோ இளைஞன்...!

அவதேஷ் குமார் தனது சொத்தை முதல் மனைவியின் இரு மகன்களுக்கு தான் எழுதி வைக்கப்போவதாக தெரிவித்து வந்துள்ளார். இது இரண்டாவது மனைவிக்கு பெரும் ஆத்திரத்தை மூட்டியுள்ளது.தனக்கும் தனது மகளுக்கும் சொத்து தராமல் எப்படி இருக்கலாம் என்ற ஆத்திரத்தில், இவர்கள் மூவரையும் கொன்றுவிட்டால் தனது பெயரில் மட்டுமே அனைத்து சொத்துக்களும் வந்துவிடும் என்று சதி திட்டம் தீட்டி இந்த கொடூர கொலைகளை நீலம் அரங்கேற்றியுள்ளார்.அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Murder