Home /News /national /

’அல்லாவின் மகிழ்ச்சிக்காக பலி கொடுத்துவிட்டேன்’ - 6 வயது மகனை கழுத்தை அறுத்துக்கொன்ற ஆசிரியை..

’அல்லாவின் மகிழ்ச்சிக்காக பலி கொடுத்துவிட்டேன்’ - 6 வயது மகனை கழுத்தை அறுத்துக்கொன்ற ஆசிரியை..

மதராசா ஆசிரியை ஷாஹிதா. நன்றி: ManoramaOnline

மதராசா ஆசிரியை ஷாஹிதா. நன்றி: ManoramaOnline

குற்றவாளி ஷாஹிதா, மதராசா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மூன்று மாதக் குழந்தையுடன்  கருவுற்றிருக்கிறார்” என துணை காவல் ஆய்வாளர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த புலக்காடு பகுதியைச் சேர்ந்த 30 வயது ஷாஹிதா, மதராசா பள்ளியின் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அல்லாவுக்காக தியாகம் செய்யும் நோக்கத்தில் தனது 6 வயது மகனை கொன்றுவிட்டதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அவரே தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். சித்தூர் மாவட்டத்தில் சமீபத்தில் நன்கு படித்த பெற்றோரே மகள்களை கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து மூட நம்பிக்கையின் பெயரால் நடந்துள்ள  இச்சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று காலை 3 முதல் 4 மணிக்கு இடையில், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்த ஷாஹிதா, அல்லாவின் மகிழ்ச்சிக்காக தியாகம் செய்யும் நோக்கில் தனது மகனைக் கொன்றுவிட்டதாக தெரிவித்ததாகவும், காவல்துறையினர் ஷாஹிதாவின் வீட்டை அடைந்தபோது, வாசலில் காத்திருந்ததாகவும் போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் குளியறையில் 6 வயது குழந்தை கழுத்து அறுபட்டு, கால்கள் கட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் படிக்கசித்தூர் நரபலி சம்பவம்: கொல்லப்படுவதற்கு முன்பாக சகோதரிகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதியப்பட்ட போஸ்ட்டுகள்..

    ஷாஷிதாவின் கணவரான டாக்சி ஓட்டுநர் சுலைமானும், அவர்களின் முதல் இரு குழந்தைகளும் வேறு ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்ததாகவும், அவர்கள் இக்கொலை குறித்து அறிந்திருக்கவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டில் இருந்து, ஜனமைத்ரி காவல் நிலையத்தின் எண்ணை சனிக்கிழமையன்றே ஷாஷிதா பெற்றுவிட்டார் என சுற்றத்தினர் தெரிவித்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்கசித்தூர் நரபலி சம்பவம்: ’நான் சிவனின் அவதாரம்.. கழுத்தில் விஷம் உள்ளது’ - கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த பேராசிரியர்..

    இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ள துணை காவல் ஆய்வாளர் ஜார்ஜ் ஹாரிஸ், ‘அதிகாலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்ட குழந்தை இத்தம்பதியின் இளைய மகன் என தெரியவந்துள்ளது. முதல் கட்ட அறிக்கையில், அல்லாவுக்கு கொன்றதாக தெரிவித்திருந்தாலும், இதில் வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளி ஷாஹிதா, மதராசா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மூன்று மாதக் குழந்தையுடன்  கருவுற்றிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

    கடந்த மாதம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் இரண்டு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே, அமானுஷ்யங்களை நம்பி, பூஜை செய்து அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Gunavathy
    First published:

    Tags: Palakkad, Palakkad murder, Poolakad, Shahida

    அடுத்த செய்தி