ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த பெண் நீதிபதி ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி பார்சல் ஒன்று வந்துள்ளது. அந்த பார்சலை நீதிபதியின் உதவியாளரிடம் ஒரு வாலிபர் கொடுத்து விட்டு சென்றுள்ளார். அந்த பார்சலை உதவியாளர் நீதிபதியிடம் தரவே அதை பெண் நீதிபதியும் பிரித்து பார்த்துள்ளார்.
அந்த பார்சலில் ஒரு ஸ்வீட் பாக்ஸ்சும் ஒரு என்வலப் கவரும் இருந்துள்ளது. அந்த கவரை பிரித்து பார்த்தபோது, அதில் அந்த நீதிபதியை ஆபாசமாக சித்தரிக்கும் விதமாக மார்ப்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் அதில் இருந்துள்ளன. மேலும் அதில் ஆபாச வார்த்தைகளும், பெண் நீதிபதி கணவரின் போன் நம்பரும் இருந்துள்ளது.
பார்சலை அனுப்பிய நபர் பெண் நீதிபதியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து எடுத்து அதை வெட்டி ஒட்டி மார்ப்பிங் செய்துள்ளார். ரூ.20 லட்சம் தனக்கு தர வேண்டும் அல்லது இந்த புகைப்படங்களை பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிட்டுவிடுவேன் என கடிதம் மூலம் மிரட்டியுள்ளான்.
அதைத் தொடர்ந்து பிப்ரவரி 27ஆம் தேதியும் இதே போல பார்சல் ஒன்று நீதிபதியின் வீட்டிற்கு வந்துள்ளது. தன்னை யாரோ பின் தொடர்ந்து பிரச்சனை செய்வதை உணர்ந்து பெண் நீதிபதி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்திற்கு பார்சல் தந்த வாலிபரின் அடையாளத்தை சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்துள்ளர். அதன் அடிப்படையில் குற்றாவளியை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். பெண் நீதிபதிக்கே இதுபோன்ற மிரட்டல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cyber crime, Rajasthan