Home /News /national /

காவல் நிலையத்தில் தீக்குளித்த இளம் பெண் - பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என விரக்தி

காவல் நிலையத்தில் தீக்குளித்த இளம் பெண் - பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என விரக்தி

காவல்நிலையத்தில் தீக்குளித்த பெண்

காவல்நிலையத்தில் தீக்குளித்த பெண்

பாலியல் வன்கொடுமை புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இளம் பெண் காவல் நிலையத்தில் தீ குளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India
    மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை  தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறை அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விரக்தியில் காவல் நிலையத்தில் தீக்குளித்தித்துள்ளார். 

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஷஹதோல் பகுதியில் 26 வயது இளம் பெண் ஒருவர் அந்த பகுதி காவல் நிலையத்தில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் அளித்துள்ளார். ஆனால் அதற்குக் காவலர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. குறைந்தபட்சம் அதற்காகப் புகாரைப் பதிவு செய்யவுமில்லை.

    இந்த நிலையில் அந்த இளம் பெண் மீண்டும் முதலமைச்சர் தனிப்பட்ட பிரிவில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து புகார் அந்த குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது அந்த பெண்ணையும் புகார் அளிக்கப்பட்ட அந்த நபரையும் அழைத்துள்ளனர். இந்த நிலையில் அங்கு வந்த அப்பெண்மணி தன்னை தானே தீ வைத்துக்கொண்டார். தீ காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் உடனடியாக ஜபல்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Also Read : சைரஸ் மிஸ்திரி மரணத்தின் தாக்கம்; பாதுகாப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்ட ஆனந்த் மகேந்திரா

    இளம்பெண் அளித்த புகாரில் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி உறவிலிருந்து விட்டு தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தைப் பற்றி காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத 2 காவலர்களை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாகவும், மேலும் ஆம்லை காவல் நிலைய பொறுப்பாளர் முகமது சமீர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சாவித்ரி சிங்- கை பணியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது புகார்  தொடர்பாக  குற்றஞ்சாட்டப்பட்டுள்ள  நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகக்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Police station, Rape case, Women

    அடுத்த செய்தி