Home /News /national /

புர்காவில் மறைக்கப்பட்ட பெட்ரோல் குண்டு.. சிஆர்பிஎஃப் முகாம் மீது வீசிய பெண்!

புர்காவில் மறைக்கப்பட்ட பெட்ரோல் குண்டு.. சிஆர்பிஎஃப் முகாம் மீது வீசிய பெண்!

சோபூரில் உள்ள சிஆர்பிஎப் பதுங்கு குழி மீது வெடிகுண்டு வீசிய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஐஜிபி தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப். பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜம்மு காஷ்மீரின் சோபூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பதுங்கு குழி மீது புர்கா அணிந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

    அந்த வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், இரவு நேரத்தில் மக்கள் கூட்டமாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் புர்கா அணிந்த பெண் ஒருவர் அந்த வழியாக செல்கிறார். அந்தப் பெண் கையில் ஒரு பையை வைத்து இருக்கிறார்.

    அந்த பையில் இருந்து குண்டை எடுத்து அவர் பதுங்கு குழிக்குள் வீசிவிட்டு அங்கிருந்து ஓடுகிறார். பதுங்குக் குழி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அங்கு லேசான தீ விபத்து ஏற்படுகிறது. உடனடியாக அங்குள்ள பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்கின்றர்.  இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் கூறுகையில்,சோபூரில் உள்ள சிஆர்பிஎப் பதுங்கு குழி மீது வெடிகுண்டு வீசிய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: CRPF

    அடுத்த செய்தி