Home /News /national /

கணவனை கொல்ல கூலிப்படையை அனுப்பிய மனைவி; கணவன் எஸ்கேப், கள்ளக்காதலன் மரணம்

கணவனை கொல்ல கூலிப்படையை அனுப்பிய மனைவி; கணவன் எஸ்கேப், கள்ளக்காதலன் மரணம்

மாதிரி படம்

மாதிரி படம்

பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் நவீன் குமாரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவர் அனுப்பிய கூலிப்படை, நவீன்  உடன் நட்பாக பழகியதால் மனைவி போட்ட பிளான் அவருக்கே வினையாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bangalore [Bangalore], India
    கர்நாடாகாவை சேர்ந்த அனுபல்லவி என்பவர் தனது நவீன் குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு பெங்களூரூவில் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு ஹிமவந்த் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியது. இந்த காதலுக்கு நவீன் குமார் இடையூறாக இருப்பார் என கருதி அவரை கொலை செய்ய ஹிமவந்த் குமாருடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார் அனுபல்லவி.

    இதனையடுத்து நவீன் குமாரை கொலை செய்ய, ஹரீஷ், நாகராஜு, முகிலன் ஆகிய முவரை அனுகியுள்ளனர். அவர்களுக்கு மொத்தம் ரூ. 2 லட்சம் பணம் கொடுப்பதாக உறுதியளித்து, அதற்கு முன்பணமாக ரூ. 90 ஆயிரம் கொடுத்துள்ளனர். மீதம் உள்ள தொகையை கொலை செய்த பின் கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

    இந்நிலையில் அந்த கூலிப்படை, கடந்த ஜூலை 23ஆம் தேதியன்று நவீனை கடத்தி தமிழ்நாடு அழைத்து வந்துள்ளது. அப்போது கடத்தல் கும்பலுக்கும் நவீனுக்கும் நட்பு ஏற்பட்டது, பின்னர் நால்வரும் சேர்ந்து உல்லாசமாக பார்ட்டி செய்யும் அளவிற்கு நெருக்கமாகினர்.

    அப்போது அனுபல்லவி வேலை முடிந்துவிட்டதா என கேட்டு போன் செய்துள்ளார். அதற்கு நவீன் குமார் உடல் மீது தக்காளி சாஸ் ஊற்றி அதை புகைப்படம் எடுத்து, அனுபல்லவிக்கு அனுப்பி கொலை செய்துவிட்டதாக நம்ப வைத்துள்ளனர். இதை பார்த்த அனுவின் காதலன் ஹிமவந்த், கொலை செய்துவிட்டதாக எண்ணி பயந்துப்போய் தற்கொலை செய்துக்கொண்டார். 

    Also Read : காரைக்காலில் சிறுமி மீது நண்டை விட்டு பாலியல் சீண்டல்: வாலிபர் போக்சோவில் கைது...

    இந்நிலையில் நவீன் குமாரின் சகோதரி, தனது சகோதரன் காணமல் போனதாக கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் ஆகஸ்ட் 6ஆம் தேதி வீடு திரும்பிய நவீன் குமார், காவல்நிலைத்தில் சென்று நடந்த அனைத்தையும் விவரித்துள்ளார். 

    இதனையடுத்து காவல்துறையினர் அனுபல்லவி, ஹிமவந்தின் போன்களை ஆய்வு செய்ததில், அனுபல்லவியின் தாயார் அம்மோஜம்மாவும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது. பின்னர் இருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Crime News

    அடுத்த செய்தி