ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரூ.1 லட்சம் டீல்.. காதலன் ப்ளான்.. கணவரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த மனைவி!

ரூ.1 லட்சம் டீல்.. காதலன் ப்ளான்.. கணவரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த மனைவி!

சைத்ரா-ஆனந்தா-சலபதி

சைத்ரா-ஆனந்தா-சலபதி

கர்நாடக மாநிலத்தில் லாரி டிரைவர் ஒருவரை அவரது மனைவி காதலனுடன் சதித்திட்டம் தீட்டி கூலிப்படை ஏவி கொலை செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலம் நந்தகுடி என்ற பகுதியில் உள்ள குவாரி ஒன்றில் கடந்த சனிக்கிழமை அன்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தை கைப்பற்றி காவல்துறை நடத்திய விசாரணையில் அதிர்சிக்குரிய உண்மைகள் அம்லபமாகியுள்ளன.

உயிரிழந்த நபரின் பெயர் ஆனந்தா என்றும் இவர் கோலார் மாவட்டத்தின் மாலூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் கண்டறிந்தனர். லாரி டிரைவரான ஆனந்தா சைத்ரா என்ற பெண்ணை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் , சைத்ராவுக்கு அண்டை வீட்டாரான சலபதி என்ற நபருடன் உறவு இருந்துள்ளது. இது கணவர் ஆனந்தாவுக்கு தெரிய வரவே ஆத்திரத்தில் அவர் தனது மனைவியை திட்டி அடித்துள்ளார்.

தனது கணவர் தன்னை அடிப்பதாக மனைவி சைத்ரா காவல்துறையில் நான்கு மாதம் முன்னர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இருவரையும் காவல்துறை அழைத்து விசாரித்து கண்டித்தது. இனி ஒற்றுமையுடன் வாழ அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளது. இருப்பினும் கடந்த இரு மாதங்களாக சைத்ரா பக்கத்து வீட்டுக்காரர் சலபதியுடன் மீண்டும் தொடர்பு வைத்துக்கொள்ள தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் ஆனந்தா, குடித்துவிட்டு மனைவியை அடிக்கத் தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க: காதலனுக்காக கணவனை கூலிசெய்யாத கொலைக்கு சிறை.. 7 ஆண்டுகளுக்குப் பின் தெரிந்த உண்மை.. உயிரோடு வந்த பெண்ணால் ஷாக்!

எனவே, கணவனை தீர்த்துகட்டிவிடலாம் என சலபதியுடன் சேர்ந்து திட்டமிட்ட சைத்ரா கூலிப்படையை அணுகியுள்ளார். அதன் அடிப்படையில் சைத்ராவின் சகோதரரின் நண்பரான பிரித்விராஜ் மற்றும் நவீன் என்ற இருவருடன் ஒரு லட்ச ரூபாய்க்கு டீல் பேசி சைத்ராவும் சலபதியும் ஆனந்தாவை கொலை செய்துள்ளனர்.இந்த அதிர்ச்சிக்குரிய உண்மை காவல்துறை விசாரணைக்கு தெரியவந்த நிலையில், சைத்ரா, சலபதி, பிரித்விராஜ் ஆகிய மூவரை கைது செய்துள்ளது.மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு கொலையளியான நவீனை காவல்துறை தேடி வருகிறது.

First published:

Tags: Bengaluru, Extramarital affair