முகப்பு /செய்தி /இந்தியா / திருவிழாவுக்குச் சென்ற பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் செய்த கும்பல்... சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கைது!

திருவிழாவுக்குச் சென்ற பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் செய்த கும்பல்... சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கைது!

கூட்டு பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள்

கூட்டு பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள்

திருவிழாவுக்கு சென்ற பெண்ணை 7 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய அதிர்ச்சி சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chhattisgarh, India

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள தர்பா பகுதியில் மாவ்லி பதார் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாத இறுதி, மார்ச் முதல் வாரங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது உறவுகார பையனுடன் திருவிழாவை பார்க்க சென்றுள்ளார். திருவிழாவில் போடப்பட்டிருந்த கடை ஒன்றில் இருவரும் சாப்பிட்டு விட்டு திரும்பியபோது ஏழு பேர் கொண்ட கும்பல் இருவரையும் வழிமறித்துள்ளது. உடன் வந்த பையனை அடித்து மிரட்டி துரத்திய அந்த கும்பல், பெண்ணை காட்டுப்பகுதிக்குள் வலுக்கட்டாயமாக தூக்கி சென்றுள்ளது.

அங்கே வைத்து பெண்ணை ஏழு பேரும் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அப்படியே விட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். மயக்கம் தெளிந்து நினைவு திரும்பிய பின் வீடு திரும்பிய பெண் தனக்கு நேர்ந்த அவலத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இன்ஸ்டாவில் அறிமுகமான நண்பரால் 15 வயது சிறுமி கர்ப்பம் : யூடியூப் பார்த்து குழந்தையை பெற்று கொன்ற கொடூரம்!

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தார்பா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை விசாரிக்க சிறப்பு படை அமைக்கப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த 12 மணிநேரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். இதில் ஒரு நபர் 18 வயதுக்கு குறைவான சிறார் என காவல்துறை தெரிவித்துள்ளது. தலைமறைவாக உள்ள மேலும் இருவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Chhattisgarh, Crime News, Gang rape