கணவர் ₹500 தராததால் மனைவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்!

rape

பெண்ணை துப்பாக்கி முனையில் கன்ஹையா பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

  • Share this:
கணவரிடம் 500 ரூபாய் கேட்டு மிரட்டிய நிலையில் அவர் பணம் தராததால், மனைவியை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப நாட்களில் நாடு முழுவதும் பாலியல் வன்புணர்வு, கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மைசூருவில் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த எம்.பி.ஏ மாணவி ஒருவர் 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அதே போல மும்பையின் சகினாகா பகுதியில் 34 வயது பெண் ஒருவர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பிறப்புறுப்பில் இரும்பு கம்பி ஒன்றை குத்தப்பட்டிருந்தது மனித நேயத்தை கேள்விக்குறியாக்கி நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்படி ஒவ்வொறு சம்பவமும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் குற்றச்சம்பவங்களும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளன.

500 ரூபாய்க்காக நடந்த பகீர் சம்பவம்:

பீகார் மாநிலத்தில், 25 வயது பெண் ஒருவரின் கணவரிடம் 500 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது ஒரு கும்பல், அவர் பணம் தர மறுக்கவே அவரை அடித்து உதைத்ததுடன் அவரின் மனைவியை கும்பலாக சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பீகார் மாநிலம், பகல்பூரில் கடந்த சனிக்கிழமையன்று இரவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Also Read: குடும்ப மானத்தை வாங்கிட்டாரு.. தந்தையை கொன்ற மகன் சொன்ன பகீர் காரணம்!

அன்றைய இரவு, 25 வயது பெண் தனது கணவருடன் சென்று கொண்டிருந்த போது, சவன் யாதவ் மற்றும் கன்ஹையா என்ற இரு வாலிபர்கள், அப்பெண்ணின் கணவரிடம் மது மற்றும் உணவு வாங்குவதற்கு 500 ரூபாய் கொடு என கேட்டிருக்கின்றனர். ஆனால் கணவர் பணம் தரமுடியாது என மறுப்பு தெரிவிக்கவே அங்கிருந்த ஆள் அரவமற்ற பகுதிக்கு கணவரை இழுத்துச் சென்ற இருவரும் அடித்து உதைத்திருக்கின்றனர். இதனிடையே அந்த நபரின் மனைவியிடம் வந்த சவன் யாதவ், நீ போய் கன்ஹையாவிடம் மன்னிப்பு கேட்டால் உன் கணவரை விட்டுவிடுவார் என கூறியிருக்கிறார்.

Also Read:   தாலிபான்களால் தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள்!

வேறுவழியில்லாமல் அந்தப் பெண் அங்கு சென்ற நேரத்தில் அவரின் கணவர் அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். இது தெரியாமல் அங்கு சென்ற அப்பெண்ணை துப்பாக்கி முனையில் கன்ஹையா பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். மேலும் சவன் யாதவையும் பாலியல் வன்புணர்வு செய்ய சொல்லியதால் அவனும் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என இருவரும் மிரட்டியுள்ளனர். பின்னர் ஒருவழியாக அங்கிருந்து தப்பி, அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டினுள் அப்பெண் தஞ்சம் புகுந்தார். அந்தப் பெண்ணுக்கு ஆடை, உணவு கொடுத்து அப்பகுதியினர் உதவினர்.  இதன் பின்னர் காவல்நிலையம் சென்று நடந்தவற்றை புகாராக அளித்திருக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: