• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிஎஸ்சி படித்தும் வாரணாசியில் பிச்சையெடுக்கும் பெண் - வைரலாகும் வீடியோ

பிஎஸ்சி படித்தும் வாரணாசியில் பிச்சையெடுக்கும் பெண் - வைரலாகும் வீடியோ

ஸ்வாதி

ஸ்வாதி

எனது குடும்பத்தினரால் நான் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டேன். எங்கெங்கோ சுற்றி கடைசியாக வாரணாசி வந்துவிட்டேன்.

  • Share this:
    பெருநகரங்களின் பரபரப்புகளில் சிக்காமல் சில மனிதர்கள் நடைபாதைகளில் அமர்ந்து இராஜாங்கம் செய்துக்கொண்டிருப்பார்கள். தனிமையில் ஏதோ பிதற்றிக்கொண்டிருப்பார்கள். யாசகம் எடுத்து வாழ்க்கை நடந்தும் அந்த மனிதர்களை நாம் பிச்சைக்காரர்களாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக பார்த்து கடந்து விடுவோம். அவர்களின் கடந்தகாலம் நமக்கு தெரியாது. நம்மை போன்றே ஏன் நம்மை விடவும் நல்ல நிலையில் இருந்திருக்கலாம். விதியின் பயனால் விதிக்கு வந்திருக்கலாம். என்ன செய்வது எல்லாவற்றுக்கும் விதியின் மீது பழியை போட்டு பழகிவிட்டோம். வாரணாசி வீதிகளில் அமர்ந்து யாசகம் கேட்கும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    வாரணாசி வீதிகளில் யாசகம் கேட்டு வயிற்றை கழுவிக்கொண்டிருக்கும் அந்த பெண் நன்கு படித்தவர். ஆங்கில உரையாடல் அவரை பிச்சைக்காரர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது. யூடியூப்பர் ஒருவரிடம் தன்னை ஸ்வாதி என அறிமுகம் செய்துக்கொள்கிறார். நான்  ஸ்வாதி, தென்னிந்தியாவில் இருந்து இங்கு வந்துள்ளேன் எனக் கூறினார். அந்த நபர் எத்தனை வருடங்களாக இங்கே இருக்கிறீர்கள் எனக் கேட்க. நான் மூன்று வருடங்களாக வாரணாசியில் இருக்கிறேன் எனக் கூறினார்.

    Also Read: காதலனின் பிறப்புறுப்பை துண்டித்த யோகா ஆசிரியை..

    நான் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறேன் என ஆங்கிலத்தில் கூறினார். நான் திருமணமாகி நல்ல நிலையில் இருந்தேன். குழந்தை பிறந்ததும் என்னுடைய வாழ்க்கை மாறியது. எனக்கு பக்கவாதம் ஏற்பட்டது. என் உடலில் வலதுபக்கம் செயலிழந்து விட்டது. அதன்பின் என் வாழ்க்கை தலைகீழானது.



    எனது குடும்பத்தினரால் நான் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டேன். எங்கெங்கோ சுற்றி கடைசியாக வாரணாசி வந்துவிட்டேன். மூன்று வருடமாக இங்கு இருக்கிறேன் எனக் கூறினார்.  வேலை கொடுத்தால் செய்வீர்களா எனக் கேட்க அவரும் சரி என பதிலளித்தார். யாராவது அவருக்கு வேலை கொடுங்கள் என வீடியோவில் அந்த நபர் கூறியுள்ளார். ஸ்வாதிக்கு உதவுங்கள் என்று வீடியோவில் அந்தப்பெண் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: