முகப்பு /செய்தி /இந்தியா / குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமை... 28 ஆண்டுகளுக்குப் பின் புகார் அளித்த பெண்

குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமை... 28 ஆண்டுகளுக்குப் பின் புகார் அளித்த பெண்

28 ஆண்டுகளுக்குப் பின் பாலியல் புகார் அளித்த பெண்

28 ஆண்டுகளுக்குப் பின் பாலியல் புகார் அளித்த பெண்

தனது சொந்த குடும்ப உறுப்பினர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் 28 ஆண்டுகள் கழித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Aligarh, India

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் தனக்கு இளம் வயதில் நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் தந்தை இளம் வயதில் இறந்துவிட்டதால் தாயார் இரண்டாம் திருமணம் செய்துள்ளார். தாயாரின் இரண்டாம் கணவர் அரவணைப்பில் வளர வேண்டிய சூழல் இந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையில், தாயின் இரண்டாம் கணவரின் உறவுக்கார ஆண்கள் மூலம் இந்த பெண்ணுக்கு சிறு வயதில் இருந்தே பாலியல் தொல்லைகளும் வன்கொடுமைகளும் நிகழ்ந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பெண் தனது 7 வயதிலேயே வளர்ப்பு தந்தை வழி உறவுக்காரர் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். சிறுமியாக இருந்த பெண்ணுக்கு முழு விவரம் தெரியாமல் தனக்கு வலி ஏற்பட்டதாக தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தாய் இந்த விவகாரத்தை தட்டி கேட்காமல் சில மருந்துகளை கொடுத்து மூடி மறைத்துள்ளார். அப்போது தொடங்கி, பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பாலியல் தொல்லைகளும் வன்கொடுமைகளும் உறவுக்கார ஆண்களால் ஏற்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு இந்த பெண்ணுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்னரும் தாய் வீட்டிற்கு செல்லும்போது பெண்ணுக்கு அதே உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் பெண் அவர்களிடம் தப்பித்து கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை வரவழைத்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது கணவரிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை எடுத்து கூறிய நிலையில், கணவரும் தனது மனைவியின் பாதிப்பை புரிந்து கொண்டார். இதை தைரியத்துடன் எதிர்கொள்ளலாம் என்று கணவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தாயார் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை விவரித்து நியாயம் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: தினமும் 10-15 ஆண்களால் பாலியல் பலாத்காரம்.. ஸ்பாவில் வேலை பார்க்கும் இளம்பெண் பகீர் புகார்

ஆனால், அந்த குடும்பத்தில் அனைவரும் இவர்கள் பேச்சை ஏற்காமல் பெண்ணின் கணவரை தாக்கியுள்ளனர். உடனடியாக இதை சட்டரீதியாக அணுகலாம் என்ற நோக்கில், பெண்ணும் கணவரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும் தேசிய பெண்கள் ஆணையம், முதலமைச்சர் அலுவலகம் ஆகியவற்றிலும் புகார்களை தெரிவித்துள்ளனர். பெண்ணின் புகாரை ஏற்று வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. 28 ஆண்டுகளுக்கு முன்னர் தனது நேர்ந்த அவலத்திற்கு தனது கணவர் அளித்த நம்பிக்கை மற்றும் தைரியத்தின் அடிப்படையில் தற்போது சட்ட ரீதியாக இந்த பெண் நீதி போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Crime News, Rape case, Uttar pradesh