ஆர்டர் செய்தவருக்கு அசைவ பீஸா: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!

ஆர்டர் செய்தவருக்கு அசைவ பீஸா: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!

பீஸா

இது சாதாரணமானது அல்ல. எங்கள் மத சம்பிரதாயங்கள், நம்பிக்கை, குடும்ப பாரம்பரியம் அனைத்தும் ஒரு நாளில் வீணடிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் மிக அலட்சியமாக பீசாக்களை இலவசமாக தருகிறோம் என்கின்றனர்.

  • Share this:
வெஜிடேரியன் பீஸா ஆர்டர் செய்தவருக்கு அசைவ பீஸா டெலிவரி செய்யப்பட்டதால் பீஸா நிறுவனத்தாரிமிருந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் பெண்மணி ஒருவர்.

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் தீபாளி தியாகி என்ற பெண்மணி. இவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார், அதில் வெஜிடேரியன் பீஸா ஆர்டர் செய்திருந்தேன், ஆனால் சைவப் பெண்மணியான எனக்கு அசைவ பீஸா டெலிவரி செய்துவிட்டனர். இதனால் அசைவத்தை உட்கொண்டு பாவத்திற்கு ஆளாகிவிட்டேன், இதனால் ஏற்பட்டுள்ள மன உளைச்சளுக்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டை பீஸா நிறுவனம் வழங்க வேண்டும் என முறையிட்டுள்ளார்.

தீபாளி தியாகி நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கின்படி, அவர் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி ஹோலி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடினோம், வீட்டில் அனைவரும் பசியாக இருந்ததால் வெஜிடேரியன் பீஸாவுக்கு ஆர்டர் கொடுத்தோம். 30 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்பதற்கு பதிலாக தாமதமாகவே பீஸா டெலிவரி செய்யப்பட்டது. இருந்தாலும் காலதாமதத்தை ஒதுக்கிவிட்டு பீசாவை சாப்பிட்டோம். அப்போது தான் அது நான் வெஜ் பீஸா என்பது தெரியவந்தது. நாங்கள் ஆர்டர் செய்த மஷ்ரூம் பீஸாவுக்கு பதிலாக நான் வெஜ் பீசா டெலிவரி செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தோம்.

உடனடியாக கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு முறையிட்டோம். இதன் பின்னர் மார்ச் 26ம் தேதி மாவட்ட மேலாளர் என கூறிய நபர் எங்களை தொடர்பு கொண்டு தங்களின் தவறுக்காக குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இலவசமான பீசா அளிப்பதாக குறிப்பிட்டார்.

இது சாதாரணமானது அல்ல. எங்கள் மத சம்பிரதாயங்கள், நம்பிக்கை, குடும்ப பாரம்பரியம் அனைத்தும் ஒரு நாளில் வீணடிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் மிக அலட்சியமாக பீசாக்களை இலவசமாக தருகிறோம் என்கின்றனர். எங்களை பொருத்தவரையில் நாங்கள் பாவத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம். இது காலத்துக்கும் எங்களை மன உளைச்சளில் தள்ளும். பல லட்சங்கள் செலவழித்து இந்த பாவத்துக்காக பூஜை புணஸ்காரங்கள் மேற்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுதும் ஏற்படும் மன உளைச்சளுக்காக நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்று அந்த மேலாளரிடம் கோரினேன். மேலும் இத்தனை பெரிய மன உளைச்சளை தந்ததுடன், இலவசமான பீசா தருகிறோம் எனக் கூறி எங்களை இழிவுபடுத்திவிட்டனர் என கூறினேன்.

நான் வெஜ் பீசா டெலிவரி செய்ததற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: