கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக பொய்யான புகார் கொடுத்து 1000க்கும் மேற்பட்ட போலீசாரை ஒரு நாள் முழுதும் இளம்பெண் ஒருவர் அழைக்கழித்து சுற்றலில் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் பல பகுதிகளிலும் பாலியல் வன்புணர்வு குற்றங்கள் அவ்வப்போது நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் நடக்காத பாலியல் வன்புணர்வு விவகாரம் ஒன்று போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை சிலர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக காவல்துறையை கலங்கடித்திருக்கிறார் 19 வயது இளம் பெண் ஒருவர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், நேற்று (டிச 13) காலை 11 மணியளவில் காலம்னா பகுதி போலீஸ்நிலையத்திற்கு வந்து தன்னை இருவர் சேர்ந்து சிக்ஹலி பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்தார்.
நேற்று காலை இசை வகுப்புக்கு சென்று கொண்டிருந்த போது வெள்ளை நிற வேனில் வந்த இருவர் தன்னிடம் வழிகேட்டதாகவும், அப்போது அவர்கள் தன்னை வேனுக்குள் இழுத்துப் போட்டு முகத்தை துணியால் மூடி எங்கோ ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக கூறினார். இளம் பெண் அளித்த புகாரை சாதாணமாக எடுத்துக் கொள்ளாத காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி சம்பவத்தில் தொடர்புடையோரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நகர காவல் ஆணையர் அமிதேஷ் குமார், கூடுதல் ஆணையாளர் சுனில் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரடியாக காவல்நிலையம் வந்து விசாரணையை தொடங்கி வைத்தனர். 1000 போலீசார் அடங்கிய 40 சிறப்பு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த வெள்ளை வேனை தேடும் முயற்சியில் நகர் முழுவதும் 250 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். 50க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
1000க்கும் மேற்பட்ட போலீசார் 6 மணி நேரத்திற்கும் மேல் தீவிர விசாரணை நடத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பெண் பொய்யாக புகார் அளித்திருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது.
சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்த போது, புகார் கூறிய பெண் நாக்பூர் வெரைட்டி ஸ்குயர் பகுதியில் 9.50 மணியளவில் பேருந்தை விட்டு இறங்கியது தெரிந்தது. அவர் அங்கிருந்து நடந்து ஜான்சி ராணி சதுக்கத்தை 10 மணியளவில் அடைந்து அங்கிர்ந்து ஆட்டோ பிடித்து ஆனந்த் டாக்கீஸ் ஸ்குயரில் 10.15 மணிக்கு இறங்கியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து ஆட்டோ பிடித்து 10.25 மணிக்கு மேயோ மருத்துவமனை வந்து அங்கிருந்து ஆட்டோ பிடித்து சிக்ஹலி ஸ்குயரை 10.54 மணிக்கு வந்திறங்கியிருக்கிறார்.
Must Read : யோகி துணையுடன் வாரணாசியில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி
11.04 மணியளவில் கலம்னா காவல்நிலையத்திற்கு அந்த பெண் புகார் கொடுக்க நடந்து வந்தது அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் தெளிவானது. எனவே இது ஒரு பொய் புகார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அப்பெண்ணிடம் விசாரித்த போது தனது காதலரை திருமணம் செய்வதற்காகவே இது போல பொய்யான புகார் கொடுத்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.