ஹோம் /நியூஸ் /இந்தியா /

தான் இறந்ததாக நம்பவைக்க இன்னொரு பெண்ணை கொன்று நாடகமாடிய பெண் கைது : அம்பலமான பகீர் சம்பவம்!

தான் இறந்ததாக நம்பவைக்க இன்னொரு பெண்ணை கொன்று நாடகமாடிய பெண் கைது : அம்பலமான பகீர் சம்பவம்!

காவல்துறை விசாரணையில் பெண்

காவல்துறை விசாரணையில் பெண்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தான் இறந்தது போன்று ஊரை நம்ப வைப்பதற்காக மற்றொரு பெண்ணை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Noida, India

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள பாத்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் பாயல். அவருடைய காதலர் அஜய் தாகுர். சில தினங்களுக்கு முன்னர் பாயல் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு அதனை தனது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். பாயல் வீட்டிலிருந்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதற்கிடையில், நொய்டாவின் கவுர் பகுதியிலுள்ள மாலில் வேலை செய்யும் ஹேமலதா என்ற காணாமல் போயுள்ளார். இதுதொடர்பாக, ஹேமலதாவின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஹேமலதாவின் செல்போன்கள் எண்ணின் கால் ஹிஸ்டரியைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், அஜய் தாகுரின் எண்ணும் இருந்தது. அஜயை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அஜய் தாகுர் ஹேமலதாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘பாயலின் பெற்றோர்கள் கடனை கொடுக்க முடியாமல் தவித்துள்ளனர். அதனால், ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் பாயலின் பெற்றோர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அதனையடுத்து, பாயல் தன்னுடைய அடையாளத்தை மறைத்து வாழ நினைத்துள்ளார். அதனால், தான் உயிரிழந்து விட்டதாக நம்ப வைப்பதற்காக அவரை ஒத்த உருவம் கொண்ட பெண்ணுடன் நட்பாக பழகி அவரை காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.

மேலும், அவரது முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி சிதைத்துள்ளனர். இந்தத் திட்டத்தை ஹூபோல் ஹாய் எனும் தொடரைப் பார்த்து போட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர். இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Uttar pradesh