தெலங்கானாவில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதே மாநிலத்தில் அடுத்து ஒரு பொறியியல் மாணவி தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.
தெலங்கானாவின் வாரங்கல் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 20 வயதான அவருக்கும், அதே கல்லூரியில் படித்த இரண்டாம் ஆண்டு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் தனது காதலனிடம் பேசுவதை சமீப காலமாக தவிர்துள்ளார். தன்னிடம் பேசுவதை தவிர்த்தால் ஆத்திரமடைந்த காதலன் அந்த பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றி தனது கல்லூரி நண்பர்களுக்கு பகிர்ந்து லீக் செய்துள்ளார்.
தனது புகைப்படங்கள் பொதுவெளியில் பகிரப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உறவினர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இது பெண்ணின் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை அந்த மாணவர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide, Crime News, Engineer suicide, Engineering student, Student Suicide, Suicide, Telangana