ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆன்லைனில் ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்த பெண்ணிடம் ரூ. 2.4 லட்சம் மோசடி- உஷாராக இருக்க குறிப்புகள் பகிரும் எஸ்பிஐ!

ஆன்லைனில் ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்த பெண்ணிடம் ரூ. 2.4 லட்சம் மோசடி- உஷாராக இருக்க குறிப்புகள் பகிரும் எஸ்பிஐ!

உணவு டெலிவரி செயலியில் பெண் ஒருவர் இனிப்புகளை ஆர்டர் செய்து ஆன்லைனில் ஆயிரம் ரூபாயை செலுத்த முயன்றுள்ளார். அப்போது பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளது.

உணவு டெலிவரி செயலியில் பெண் ஒருவர் இனிப்புகளை ஆர்டர் செய்து ஆன்லைனில் ஆயிரம் ரூபாயை செலுத்த முயன்றுள்ளார். அப்போது பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளது.

உணவு டெலிவரி செயலியில் பெண் ஒருவர் இனிப்புகளை ஆர்டர் செய்து ஆன்லைனில் ஆயிரம் ரூபாயை செலுத்த முயன்றுள்ளார். அப்போது பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையைச் சேர்ந்த 49 வயது பெண் ஒருவர் தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது ஆன்லைன் மோசடியால் ரூ. 2.4 லட்சத்தை இழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மும்பை புறநகர் அந்தேரியில் வசிக்கும் பூஜா ஷா என்ற பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உணவு டெலிவரி செயலியில் இனிப்புகளை ஆர்டர் செய்து ஆன்லைனில் ஆயிரம் ரூபாயை செலுத்த முயன்றுள்ளார். அப்போது பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளது.

பின்னர் ஆன்லைனில் அந்த இனிப்பு கடையின் எண்ணைக் கண்டுபிடித்துள்ளார். அந்த எண்ணிற்கு போன் செய்தபோது மறுமுனையில் இருந்த ஒருவர் அவரது கிரெடிட் கார்டு எண்ணையும் செல்போனில் வந்த ஓடிபியையும் பகிருமாறு கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் பின்விளைவுகளை அறியாமல் தனது கார்டு விவரங்களையும் ஓடிபியையும் பகிர்ந்துள்ளார். பகிர்ந்த சில நிமிடங்களில் அப்பெண்ணின் கணக்கில் இருந்து ரூ. 2,40,310 பறிக்கப்பட்டுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இம்மோசடிக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

UPI பரிவர்த்தனைகளின் போது ஆன்லைன் மோசடியைத் தடுப்பதற்கு சில முக்கிய குறிப்புகளைப் பகிர்ந்துள்ளது எஸ்பிஐ:

யாரிடமிருந்தும் பணம் பெறும்போது உங்கள் UPI பின்னை உள்ளிட வேண்டிய அவசியமில்லை. உங்கள் UPI பின்னைக் கேட்டு உங்களுக்கு ஏதேனும் குறுஞ்செய்தி அல்லது அழைப்பு வந்தால், அதைப் புறக்கணிக்கவும். PIN என்பது வங்கிக் கணக்கின் உண்மையான உரிமையாளரால் யாருக்கேனும் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் பாதுகாப்புக் குறியீடாகும். இது யாருக்கேனும் பணம் அனுப்பும் போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது

நீங்கள் பணம் அனுப்பும் நபரின் அடையாளத்தைச் சரிபார்ப்பது நல்லது. அவ்வாறு செய்வது உங்களை மோசடியில் இருந்து பாதுகாக்க உதவும். பணத்தைப் பெறுபவர் உங்களுக்குத் தெரிந்தவர் தானா அல்லது போலி கணக்கா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

தற்செயலான அல்லது அறியப்படாத பணம் வசூலிக்கும் கோரிக்கைகளோடு குறுஞ்செய்தி வந்தால் அதனை ஏற்க வேண்டாம்

உங்கள் ஏடிஎம் பின் அல்லது கார்டின் சிவிவி எண்ணைக் கேட்டு அழைப்புகள் வந்திருக்கலாம். நற்சான்றிதழ்களைப் போலவே, UPI பின்னும் ஒரு ரகசியக் குறியீடாகும். இது யாருடனும் பகிரப்படக்கூடாது

வணிகர், கடை அல்லது தனிநபர்கள் வழங்கிய QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் UPI பயன்பாடுகளில் பணம் செலுத்தலாம். QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, ​​பயனாளியின் பெயர் உங்கள் செல்போன் திரையில் தோன்றும். பணம் அனுப்பும் முன் பயனாளியின் விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளவும்

உங்கள் ஏடிஎம் பின், நெட்பேங்கிங் பாஸ்வெர்டு மற்றும் பிற பாஸ்வெர்டுகளை மாற்றுவது போல், உங்கள் UPI பின்னையும் தவறாமல் அவ்வப்போது மாற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது. இது உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

Published by:Archana R
First published:

Tags: Mumbai, Online Frauds