ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலிக்கு போதை மருந்து கொடுத்து மகன் பாலியல் பலாத்காரம் செய்வதை வீடியோ எடுத்த கொடூரத் தாய்!

காதலிக்கு போதை மருந்து கொடுத்து மகன் பாலியல் பலாத்காரம் செய்வதை வீடியோ எடுத்த கொடூரத் தாய்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தன் காதலிக்கு போதை மருத்து கொடுத்து, மகன் பாலியல் பலாத்காரம் செய்வதை தாய் வீடியோ எடுத்த கொடூரமான சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது.

  சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 19 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக நடித்து வந்துள்ளார். ஒரு நாள் அந்த இளைஞர் அப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். காதலன் அழைக்கிறார் என்று நம்பி அப்பெண் இளைஞரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

  வீட்டிற்குச் சென்றதும், இளைஞரின் அம்மா இளம்பெண்ணை உபசரித்து, சாப்பிடுவதற்கு பண்டங்கள் கொடுத்துள்ளார். அந்தப் பண்டங்களில் போதை மருந்து கலந்திருந்தது அப்பெண்ணுக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் மயக்கமான அந்தப் பெண்ணை, படுக்கையறைக்கு தூக்கிச் சென்றுள்ளார் அந்த இளைஞர்.

  படுக்கையறையில் அந்தப்பெண்ணை, இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மகன் பாலியல் பலாத்காரம் செய்வதை தாய் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த இளைஞரின் சகோதரியும், அவரது கணவனும் சேர்ந்து, அந்த வீடியோவை வைத்து, அப்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

  அந்தப் பெண் வேறு வழியில்லாமல், அவரது தந்தை நிலம் விற்று வைத்திருந்த 4 லட்சம் ரூபாயை, அந்தக் கும்பலிடம் கொடுத்துள்ளார். மேலும் பணம் கேட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை அந்தக் குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, நிலம் விற்று மகளிடம் கொடுத்த பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது கதறி அழுதபடியே நடந்த உண்மையை, தந்தையிடம் கூறியுள்ளார் அந்த இளம்பெண்.

  பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இதைப் பொறுக்க முடியாமல், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அந்த இளைஞரின் குடும்பத்தை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

  Published by:Ilavarasan M
  First published:

  Tags: Chhattisgarh, Crime | குற்றச் செய்திகள்