Home /News /national /

Viral Video: டெல்லி அமர் காலனியில் இளம்பெண்ணை தாக்கி அவர் மீது காரை ஏற்றிய நபர் கைது

Viral Video: டெல்லி அமர் காலனியில் இளம்பெண்ணை தாக்கி அவர் மீது காரை ஏற்றிய நபர் கைது

டெல்லி கார் விபத்து

டெல்லி கார் விபத்து

இவ்விவகாரத்தை அலட்சியமாக கையாண்டு அப்பகுதியைச் சேர்ந்த மூன்று காவலர்களை டெல்லி காவல்துறை இடமாற்றம் செய்துள்ளது.

    டெல்லியில் இளம் பெண் ஒருவரை தாக்கி அவர் மீது இளைஞர் ஒருவர் கார் ஏற்றி சென்ற அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வாடகைக் காரில் பயணித்துள்ளார். இவரது கார் அமர் காலனியை நெருங்கியபோது, பலேனியோ காரை ஓட்டிவந்தவருக்கும் ஸ்கார்பியோ காரை ஓட்டிவந்த மற்றொரு நபருக்கும் வழி விடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ஸ்கார்பியோ கார் டிரைவருக்கும் மற்றொரு பலேனியோ காரை ஓட்டிவந்ச நபரான உதய்வீர் சிங் என்பவருக்கும் பயங்கர வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருவருக்கும் சுமுகம் ஏற்படுத்த வாடகைக் காரில் வந்த அந்த இளம்பெண் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். ஓட்டுநரை தரக்குறைவாக பேச வேண்டாம் என உதய்வீர் சிக் என்ற நபரிடம் இளம்பெண் கேட்ட நிலையில், அந்த பெண்ணை உதய்வீர் அவேசமாக திட்டி தரக்குறைவாக பேசியுள்ளார். சற்று நேரத்தில் அந்த நபரின் நண்பரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

    அதன் பின்னர், அந்த பெண்ணை இருவரும் தாக்கியுள்ளனர். இருவரையும் பிடிக்க அந்த பெண் முயற்சித்த போது, பெண்ணை கீழே தள்ளி அவர் மீது காரை ஏற்றி இருவரும் தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.



    இதையடுத்து டெல்லி காவல்துறை உதய் வீர் சிங்கை கைது செய்துள்ளது. மற்றொரு நண்பரான பிட்டோ தப்பியுள்ள நிலையில், அவரை காவல்துறை தேடி வருகிறது. இருவர் மீது இபிகோ 323, 509 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரத்தை அலட்சியமாக கையாண்டு அப்பகுதியைச் சேர்ந்த மூன்று காவலர்களை டெல்லி காவல்துறை இடமாற்றம் செய்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Attack on Women, Viral Video

    அடுத்த செய்தி