Home /News /national /

கேரளாவில் தனியார் பேருந்து கவிழ்ந்து செவிலியர் உயிரிழப்பு..

கேரளாவில் தனியார் பேருந்து கவிழ்ந்து செவிலியர் உயிரிழப்பு..

கேரளாவில் ஆட்டோவை அதிவேகத்தில் முந்த முயன்ற தனியார் பேருந்து கவிழ்ந்து செவிலியர் உயிரிழந்தார்.

கேரளாவில் ஆட்டோவை அதிவேகத்தில் முந்த முயன்ற தனியார் பேருந்து கவிழ்ந்து செவிலியர் உயிரிழந்தார்.

கேரளாவில் ஆட்டோவை அதிவேகத்தில் முந்த முயன்ற தனியார் பேருந்து கவிழ்ந்து செவிலியர் உயிரிழந்தார்.

  • Last Updated :
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் இருந்து தலசேரி வழியாக பையன்னூர் பகுதிக்கு  நேற்று மாலை அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து  ஒன்று குற்றிக்கோல் என்னும் பகுதியில் வரும் போது ஆட்டோ ஒன்றை அதிவேகத்தில்  முந்த முயன்றுள்ளது.

இதில் கட்டுபாட்டை இழந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த பேருந்தில் பயணித்த செவிலியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயங்கள் அடைந்த மீதமிருந்த பயணிகளை பொதுமக்கள் மீட்டு கண்ணூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Also see... நீட் தேர்வுக்கு முன்பாக தற்கொலை நிகழ்வுகள் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

போலீசார் விசாரணையில் இறந்த செலியர் கண்ணூரை சேர்ந்த ஜோபியா ஜோசப் என்பது தெரியவந்துள்ளது. பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் அதிவேகத்தில் இயக்கியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Bus accident, Kerala

அடுத்த செய்தி