சாமி கும்பிட சென்ற பெண்ணை அறங்காவலர் ஒருவர் அடித்து கோவிலுக்கு வெளியே இழுத்து செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி பகுதியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஒன்று அமைந்து உள்ளது. இதில், சாமி கும்பிட சென்ற பெண் ஒருவரை கோவிலின் அறங்காவலர்களில் ஒருவரான முனிகிருஷ்ணப்பா என்பவர் அடித்து, துன்புறுத்தியுள்ளார். அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து கோவிலில் இருந்து தர தரவென்று வெளியே இழுத்து செல்கிறார் . இதனால் அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில்,முனிகிருஷ்ணப்பா என்பவர் என்னிடம் மிக கடுமையாக நடந்துக்கொண்டார். குளிக்காமலோ அல்லது தூய்மையாக இல்லாமலோ கோவிலுக்கு வர கூடாது எனவும் நீ கருப்பாக இருக்கிறாய் கோவிலுக்குள் உன்னை அனுமதிக்க முடியாது எனக்கூறி, உடல்ரீதியாக திட்டியும், அடித்தும் துன்புறுத்தினார் என தெரிவித்து உள்ளார். இரும்பு தடியால் அடிக்கவும் முயன்றார். அதற்குள் கோவில் பூசாரிகள் அவரை தடுத்துவிட்டனர் எனக் கூறியுள்ளார். இதுபற்றி வெளியே கூறினால், என்னையும், கணவரையும் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியதாக தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரத்தில் கோவிலில் இருந்த முனிகிருஷ்ணப்பா தரப்பிலும் பதிலுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், “அந்த பெண் கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றார். தனக்கு சாமி வந்து விட்டது எனவும் வெங்கேடேஸ்வரா எனது கணவர் அவரது அருகில் நான் அமர வேண்டும் எனவும் வற்புறுத்தினார். ஆனால், பூசாரிகள் அவரை விடவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
A Dalit woman is being assaulted and removed from the temple premises in Bangalore, India! pic.twitter.com/RkTiMT4yCe
— Ashok Swain (@ashoswai) January 6, 2023
மேலும் அவரை தடுத்து நிறுத்தியபோது ஆத்திரமடைந்து, பூசாரிகளில் ஒருவர் மீது அந்த பெண் எச்சில் துப்பினார். பல முறை அவரை வெளியே செல்லும்படி பணிவாக கேட்டு கொள்ளப்பட்டது. அதனை அவர் கேட்கவில்லை. அதனால்தான், நாங்கள் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி இழுத்து வெளியே விடவேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்தார். இருதரப்பு புகாரையும் பெற்று கொண்ட போலீசார், பெண் மீது தாக்குதல் நடந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை பெற்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.