பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரின் பிறப்புறுப்பை அரிவாளால் வெட்டிய பெண்!

பாலியல் வன்கொடுமை

கட்டிலின் கீழ் இருந்த அரிவாளை எடுத்து அந்த நபரின் பிறப்புறுப்பை அப்பெண் தனது சுயபாதுகாப்புக்காக வெட்டியுள்ளார்.

  • Share this:
வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் பிறப்புறுப்பை அரிவாளாள் பெண் வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள உமரிஹா எனும் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி, கடந்த வியாழன் அன்று அவருடைய கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட தன்னுடைய 13வயது மகனுடன் தனியாக இருந்துள்ளார். இரவு 11 மணியளவில் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்தார்.

ஆரம்பத்தில் வீட்டுக்குள் புகுந்தவர் திருடன் என்று நினைத்ததால், அக்கம்பக்கத்தினரின் உதவியை பெரும் நோக்கில் அந்த பெண்மணியின் மகன் வீட்டில் இருந்து வெளியே தப்பித்து சென்றார். ஆனால் வீட்டுக்குள் புகுந்த நபர், அந்த பெண்மணியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றார்.

கிட்டத்தட்ட 20 நிமிடங்களாக அந்த நபருடன் அப்பெண்மணி போராடினார். இறுதியில் கட்டிலின் கீழ் இருந்த அரிவாளை எடுத்து அந்த நபரின் பிறப்புறுப்பை அப்பெண் தனது சுயபாதுகாப்புக்காக வெட்டியுள்ளார். இதன் பின்னர் அங்கிருந்து தப்பி அருகாமையில் காதி எனும் பகுதியில் இருந்த புறக்காவல்நிலையத்திற்கு அதிகாலை 1.30 மணியளவில் சென்று நடந்தவற்றை கூறி அந்த நபர் மீது புகார் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு காயங்களுடன் போராடிக்கொண்டிருந்த நபரை மீட்டு முதலுதவிக்காக அருகாமையில் இருந்த மருத்துவமனையில் இதன் பின்னர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும், உயர் சிகிச்சைக்காக ரேவா மாவட்ட மருத்துவமனைக்கும் அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பல பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதே நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபரின் புகாரின் பேரில் அந்த பெண் மீதும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 
Published by:Arun
First published: