ஹோம் /நியூஸ் /இந்தியா /

வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர்‌ மீது பொய்யான பாலியல்‌ புகார்‌ கூறிய பெண் காவலர் பணியிடை நீக்கம்!

வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர்‌ மீது பொய்யான பாலியல்‌ புகார்‌ கூறிய பெண் காவலர் பணியிடை நீக்கம்!

கேரள மாநிலம்‌ கோழிக்‌ கோட்டில்‌ வாடகை பாக்‌கியை கேட்ட வீட்டு உரிமையாளர்‌ மருமகன்‌ மீது பொய்யான பாலியல்‌ புகார்‌ கொடுத்த பெண்‌ துணை காவல் ஆய்வாளர்‌ பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்‌டுள்ளார்‌.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கேரள மாநிலம்‌ கோழிக்‌ கோட்டில்‌ உதவி ஆணையர்‌ அலுவலகத்தில்‌ துணை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர்‌, சுகுணவல்லி. இவர்‌, கோழிக்கோடு பன்னியங்கரா பகுதியில்‌ உள்ள ஒரு வீட்டில்‌ வாடகைக்கு குடியிருந்‌து வந்தார்‌. அங்கு கடந்த 4 மாதமாக வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  பலமுறை கேட்டுப்பார்த்தும்‌ அந்த பெண்‌ காவல் ஆய்வாளர்‌ சுகுணவல்லி வாடகை கொடுக்‌காததால்‌ அவர்‌ மீது வீட்டு உரிமையாளர்‌ போலீசில்‌ புகார்‌ அளித்தார்‌. அதுகுறித்து விசாரிப்பதற்காக சுகுணவல்லியை

  காவல் ஆய்வாளர்‌ அழைத்தார்‌. ஆனால்‌ சுகுணவல்லி ஆஜராகவில்லை.

  மாறாக 4 நாட்கள்‌ கழித்து பன்னியங்கரா போலீசில்‌ சுகுணவல்லி புகார்‌ அளித்தார்‌. அதில்‌ தன்னிடம்‌ வீட்டு உரிமையாளரின்‌ மருமகன்‌ பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும்‌, கையைப்‌ பிடித்து இழுத்து,

  தன்னுடைய திருமண மோதிரத்தைப்‌ பறித்துக்கொண்டதாகவும்‌ கூறியிருந்தார்‌.

  மேலும்‌, தான்‌ அட்வான்சாக கொடுத்‌திருந்த ரூ.70 ஆயிரம்‌ உள்பட ரூ. 1 லட்சம்‌ தனக்கு வீட்டு உரிமையாளர்‌ தர வேண்டும்‌ என்‌றும்‌ புகாரில்‌ தெரிவித்திருந்‌தார்‌. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்‌, விசாரணை மேற்கொண்டனர்‌. அப்‌போது சுகுணவல்லி கூறியவை அனைத்தும்‌ பொய்‌ என்பதும்‌, அவர்‌ குறிப்பிட்டபடி சம்பவம்‌ எதுவும்‌ நடைபெறவில்லை என்புதும்‌ தெரியவந்தன.

  அதைத்‌ தொடர்ந்து, பெண்‌ துணை காவல் ஆய்வாளர்‌ சுகுணவல்லி பணியிடை நீக்கம்‌ செய்‌யப்பட்டார்‌. அவர்‌ மீது துறை ரீதியான விசாரணைக்கும்‌ கோழிக்கோடு உதவி காவல் ஆணையர்‌ சித்திக் உத்தரவிட்டுள்ளார்‌.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Kerala, Kerala police, News On Instagram