காவல்நிலையத்திலிருந்து பொருட்கள் திருடி ₹ 26 லட்சம் சம்பாதித்த பெண் போலீஸ்!

woman police

பெண் காவலர், கடந்த 6 ஆண்டுகளில் இதே போல திருட்டு பொருட்கள் விற்பனை மூலம் 26 லட்ச ரூபாய் வருமானம் பார்த்தது விசாரணையில் தெரியவந்தது.

  • Share this:
திருடர்களிடமிருந்து பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த திருட்டு பொருட்களை, காவல்நிலையத்தில் இருந்து திருடி 26 லட்ச ரூபாய் வருமானம் பார்த்த பெண் போலீஸ் ஒருவர் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.

திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவோர்களிடமிருந்து கைப்பற்றப்படும் பொருட்கள் வழக்கு முடியும் வரை காவல்நிலையங்களிலும், அல்லது கருவூலங்களிலும் பாதுகாக்கப்படும். அந்த வகையில் பாதுகாப்பாக வைக்கப்படும் பொருட்களுக்கு போலீஸ் ஒருவரை பொறுப்புக்காக நியமிப்பார்கள். இப்படி திருடிய பொருட்களை பாதுகாக்கும் காவல் அதிகாரி ஒருவர், கொஞ்சம் கொஞ்சமாக திருட்டு பொருட்களை காவல்நிலையத்தில் இருந்தே திருடி விற்பனை செய்து வந்ததன மூலம் 26 லட்ச ரூபாய் வருமானம் பார்த்துள்ளார்.

கணக்கு சரிபார்த்தல் பணியின் போது கையாடல் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது வேலியே பயிரை மேய்ந்த கதை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் பால்கார் மாவட்டத்தில் உள்ள வசய் காவல்நிலையத்தில் தான் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அந்த காவல்நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த திருட்டு பொருட்களை சரிபார்த்த போது அதில் குறைபாடு கண்டறியப்பட்டது. பின்னர் உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் பாதுகாப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து வந்த காவலரான கங்கல் கெய்க்வாட் என்பவர், அங்கிருந்த பொருட்களை திருடி பழைய பொருட்கள் விற்பனை செய்பவர் ஒருவரின் உதவியுடன், விற்பனை செய்து காசு பார்த்து வந்தது தெரியவந்தது.

Also Read: 600 தாலிபான்களை ஒரே நாளில் போட்டுத்தள்ளிய பஞ்ஷிர் போராளிகள்; 1000 பேர் சிறைபிடிப்பு!

அந்த பெண் காவலர், கடந்த 6 ஆண்டுகளில் இதே போல திருட்டு பொருட்கள் விற்பனை மூலம் 26 லட்ச ரூபாய் வருமானம் பார்த்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் கல்யாண் கர்பே, சம்பந்தப்பட்ட பெண் போலீசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட நிலையில் அவரை கைதும் செய்திருக்கின்றனர் காவல்துறையினர். பெண் போலீஸ் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டு பணம் பார்த்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: