Home /News /national /

14 முறை கட்டாய கருக்கலைப்பு - லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பார்ட்னரின் மீதான விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்..

14 முறை கட்டாய கருக்கலைப்பு - லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பார்ட்னரின் மீதான விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்..

கட்டாய கருக்கலைப்பு காரணமாக பெண் தற்கொலை

கட்டாய கருக்கலைப்பு காரணமாக பெண் தற்கொலை

Forced Abortion | கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண், கடந்த ஏழு ஆண்டுகளாக லிவ் இன் உறவில் இருந்துள்ளார்.

    டெல்லியில் 33 வயது பெண் ஒருவர் கட்டாய கருக்கலைப்பு தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தென் கிழக்கு டெல்லியின் ஜீதாபூர் என்ற பகுதியில் நடைபெற்றுள்ளது.

    இது தொடர்பாக காவல்துறை தரப்பு கூறுகையில், உயிரிழந்த பெண் கடந்த 8 ஆண்டுகளாகவே கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். பின்னர் இவருக்கு மென்பொருள் பொறியாளர் ஒருவருடன் உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் லிவ் இன் ரிலேஷன்சிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். அந்த ஆண் நபர் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தொடர்ந்து நம்பிக்கை அளித்து ஏமாற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில் இந்த 7 ஆண்டுக்கால உறவின் போது சுமார் 14 முறை கருவுற்றுள்ளார் அந்த பெண். அனைத்து முறையும் அவரோடு உறவில் இருந்த மென்பொருள் பொறியாளர் கருவை கலைக்கக் கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் இப்படி கட்டாயக் கருக்கலைப்பில் தொடர்ந்து ஈடுபடுத்தியதால் மனம் உடைந்த அந்த பெண் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளது. அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் பீகாரில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு, அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண் தங்கியிருந்த வீட்டின் அறையில் சோதனை மேற்கொண்ட டெல்லி காவல்துறை முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் - முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கைது.. 27 பேர் மீது எப்ஐஆர்!

    மேலும், அந்த பெண்ணுடன் உறவில் இருந்த மென்பொருள் பொறியாளருடன் இபிகோ 306, 376, 313ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், அந்த பெண்ணின் முதல் கணவரிடமும் காவல்துறை விசாரித்துள்ளது.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

    மாநில உதவி மையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Kannan V
    First published:

    Tags: Abortion, Crime News, Delhi, Suicide

    அடுத்த செய்தி