ரயில்வே ட்ராக்கின் நடுவே பெண் ஒருவர் படுத்துக்கொண்டே கூலாக செல்போனில் பேசிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைராலாகி வருகிறது.
ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது கவனக் குறைவு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுவது வழக்கம். ஆனால், பெண் ஒருவர் வான்டெட்டாக வந்து செல்போன் ட்ராக்கில் படுத்துக் கொண்டு கூலாக செல்போன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎஸ் அதிகாரியான தீபான்ஷு ட்விட்டரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் முகத்தை துப்பட்டாவால் மூடிய பெண் ஒருவர் ரயில்வே டிராக்கின் நடுவில் படுத்துக்கொண்டு கூலாக செல்போன் பேசிவருகிறார். அந்த டிராக்கின் மீது கூட்ஸ் ரயில் கடந்த போன பின் பொறுமையாக எழுந்து நடந்து டிராக்கை விட்டு வெளியே வருகிறார். அப்போதும் அவர் செல்போன் பேசுவதை நிறுத்தாமல் கேஸ்சுவலாக செல்போன் பேசிக் கொண்டே இருக்கிறார். இந்த வைரஸ் வீடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Also Read : ட்விட்டருக்கு விலை பேசும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்
இந்த வீடியோ ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் சம்பந்தப்பட்ட பெண்ணை சமூக வலைத்தளத்தில் வறுத்து எடுத்து வருகின்றனர்.
மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போன்கள் மாறிவிட்டன. இது போன்ற நபர்களுக்கு எந்த கருணையும் காட்டக் கூடாது, இது போன்ற நபர்களால் இவர்களின் குடும்பமும் பெரும் பாதிப்பை சந்திக்கும் எனக் காட்டமாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கை டேக் செய்து சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்ய வேண்டும் எனவும் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
அதேவேளை, அந்த பெண் 6ஜி சிக்னல் கிடைக்கிறதா என ட்ராக்குக்குள் புகுந்து சோதனை செய்வதாக ஒரு நபர் கிண்டலாக பதிவிட்டுள்ளார். ரயில்வே பாதைகளில் பயணிகள் கவனத்துடன் பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. கடந்த மாதம், மும்பையின் வதாலா ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த லோக்கல் ரயிலில் பயணி ஒருவர் ஏற முயன்று தவறி விழுந்தார்.
நல்ல வேளையாக ஆர்பிஎப் காவலர் அதை கவனித்து பயணியை பிடித்து காப்பாற்றினார். இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரயில்வே தனது ட்விட்டர் அக்கவுண்டில் விழிப்புணர்வு செய்தியாக பதிவிட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.