வாக்கிங் சென்ற போது விபரீதம்: நாய் கடித்துக் குதறியதில் தொழிலாளி பலி - உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

பிட்புல் ரக நாய்

தடுக்கச் சென்ற நாயின் உரிமையாளரையும் நாய் கடித்துக் குதறியதால் அவரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

  • Share this:
நாயுடன் வாக்கிங் சென்ற போது, வேலை பார்த்து வந்த கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த கட்டுமான கூலித் தொழிலாளியை நாய் கடித்துக் குதறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் எலஹங்கா காவல்சரகத்தில் உள்ள ஆத்தூர் லே அவுட் பகுதியில் நேற்று முன் தினம் அந்த சோக சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ஆத்தூர் லே அவுட் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 36 வயதாகும் நரசிம்மா என்பவர் வேலை முடிந்து ஓய்வுக்காக மாடிப்படியின் கீழ் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மாடியில் இருந்து பிட்புல் எனப்படும் வெளிநாட்டு ரக நாய் ஒன்றை அதன் உரிமையாளர் வாக்கிங் கூட்டிச் செல்வதற்காக கீழிறங்கி வந்த போது தூங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி நரசிம்மாவின் மீது பிட்புல் நாய் திடீரென பாய்ந்துள்ளது.

நரசிம்மா சுதாரித்து எழுவதற்குள் அவருடைய கழுத்தை கெட்டியாக பிடித்த நாய் கடித்து குதறியிருக்கிறது. தடுக்கச் சென்ற நாயின் உரிமையாளரையும் நாய் கடித்துக் குதறியதால் அவரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே நாய் கடித்ததால் அலறி துடித்த நரசிம்மாவின் மரண ஓலம் கேட்டு அங்கு சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டு ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் போராடிக்கொண்டிருந்த நரசிம்மாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் நரசிம்மா வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நாய் கடித்து தொழிலாளி நரசிம்மா பலியான விவகாரம் குறித்து விசாரணை நடத்திய எலஹங்கா காவல்துறையினர் அலட்சியமாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்தியதாக நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Read More:   இந்த பழைய ஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் உங்களால் ரூ.45,000 சம்பாதிக்க முடியும்!

பெங்களூரு நகரில் நாய் கடித்து குதறியதில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாய் வளர்ப்பவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து விதிமுறைகளை பின்பற்றி வளர்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஜோதி பார்க் 6வது தெருவில் நாய் வளர்ப்பவருக்கும், அண்டை வீட்டாருக்கும் இடையே நாயினால் ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.

உங்கள் நாயை சுதந்திரமாக விடாமல் செயினால் கட்டிப்போடுங்கள், எங்கள் வீட்டு குழந்தைகளை துரத்துகிறது என அண்டை வீட்டார் தெரிவித்த நிலையில் டாமி என அதன் பெயரை கூறாமல் நாய் என எப்படி அழைக்கலாம் என நாயின் உரிமையாளர் கோபப்பட அங்கு கம்பு, கட்டை, இரும்பு கம்பி ஆகியவற்றுடன் நடைபெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: