திருப்பதி அருகே ரேணிகுண்டாவை சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப தகராறில் கணவனை கொலை செய்து அவருடைய தலையை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டாவை சேர்ந்தவர் ரவிசந்த்சூரி (55), வசுந்தரா, (45). இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு மனநிலை சரியில்லாத மகன் ஒருவர் இருக்கிறார்.
இந்த நிலையில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருப்பது பற்றி அறிந்த மனைவி வசுந்தரா, கணவரிடம் இதுபற்றி பேசி கண்டித்திருக்கிறார். இதனால் 2 பேருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுள்ளது.
இந்த நிலையில் இன்று கணவனின் கள்ள தொடர்பு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தான் என்ன செய்கிறோம் என்பது கூட அறியாத மனநிலைக்கு சென்ற வசுந்தரா, கணவனை பலமாக தாக்கி கத்தியால் அவருடைய கழுத்தில் வெட்டி கொலை செய்தார். பின்னர் கணவனின் தலையை கையில் எடுத்து பையில் போட்டு எடுத்து கொண்டு ரேணிகுண்டா காவல் நிலையத்திற்கு நடந்து சென்று சரணடைந்தார்.
Also read: மகளிடம் பேசிய திருமணமான இளைஞரை கொலை செய்த பக்கத்து வீட்டு குடும்பத்தினர்
கணவனின் தலையுடன் மனைவி நடந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வசுந்தராவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, கள்ளத்தொடர்பு காரணமாக கணவனை கொலை செய்தேன் என்று அவர் கூறினார். வசுந்தரா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளத்தொடர்பு காரணமாக தந்தை மரணம் அடைந்த நிலையில், தாய் சிறைக்கு சென்று விட்டார். இதனால் மனநிலை சரியில்லாத அந்த மகன் தற்போது நிற்கதியாக நிற்கிறார்.
Also read:
கர்ப்பிணி வனத்துறை அதிகாரியின் முடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு கொடூர தாக்குதல் - வீடியோஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.