ஹோம் /நியூஸ் /இந்தியா /

சேரில் உட்கார்ந்ததற்காக பெண்ணை கடுமையாக தாக்கும் ஓட்டல் உரிமையாளர்!

சேரில் உட்கார்ந்ததற்காக பெண்ணை கடுமையாக தாக்கும் ஓட்டல் உரிமையாளர்!

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

அந்த ஹோட்டலில் பணி புரியும் பெண் ஊழியர், நேகிப் ஜமான் உட்கார்ந்திருந்த நேரத்தில் அவருக்கு எதிராக உள்ள சேரில் உட்கார்ந்துள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அசாம் மாநிலம் கௌஹாத்தியில் கிராண்ட் மெஜஸ்டி ஹோட்டல் எம்.டி., பெண் ஊழியர் ஒருவர் தனக்கு எதிரில் நாற்காலியில் உட்கார்ந்தார் என்பதற்காக அவரை கடுமையாக தாக்கினார்.

  அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ளது கிராண்ட் மெஜஸ்டி நட்சத்திர ஹோட்டல். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நுர்ஜமால் சர்காரின் மகன், நேகிப் ஜமான்தான் அந்த ஹோட்டலின் எம்.டி. அந்த ஹோட்டலில் பணி புரியும் பெண் ஊழியர், நேகிப் ஜமான் உட்கார்ந்திருந்த நேரத்தில் அவருக்கு எதிராக உள்ள சேரில் உட்கார்ந்துள்ளார்.

  அதனைப் பார்த்து ஆத்திரமடைந்த ஜமான், வேகமாக எழுந்துவந்து பெண் ஊழியரை கீழே இழுத்துப் போட்டு கடுமையாகத் தாக்கினார். இந்தச் சம்பவம் அனைத்தும் ஹோட்டலில் இருந்த சி.சி.டி.வியில் பதிவானது. பின்னர், ஜமான் பாசிஸ்தா காவல்நிலையத்தில் சரண்டர் ஆகிவிட்டார். ஈகோவின் காரணமாக பெண் ஊழியரை இரக்கமில்லாமல் தாக்கியச் சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Karthick S
  First published:

  Tags: Woman