ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் பிட்புல் ரக நாய் கடித்ததில் 30 வயது மதிக்கதக்க பெண்மணி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக குருகிராம் காவல்துறையினர் கூறியதாவது, குருகிராமில் உள்ள சிவில் லைன்ஸ் என்ற பகுதியில் வசித்து வருபவர் வினித் சிகாரா. இவர் விலை உயர்ந்த பிட் புல் ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இவர் நேற்று தனது நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நாயின் கழுத்தில் இருந்த சங்கிலியை லூஸ் செய்து சிறிது நிமிடம் அவர் விடுவித்துள்ளார்.
அந்த சமயத்தில் அந்த வளர்ப்பு நாய், அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த முன்னி என்ற பெண் மீது பாய்ந்து பயங்கரமாக கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நாயிடம் இருந்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர் தற்போது உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
உயிருக்கு போராடி வரும் பெண்மணி முன்னி அப்பகுதியில் வீட்டு வேலை செய்பவர் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் நாயின் உரிமையாளர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட உரிமையாளர் வினித் சிகாரா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குருகிராம் பகுதி ஏசிபி பிரீத் பால் சிங் சங்வான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருந்த பள்ளி மாணவர்கள்.. வீடியோ வைரலானதால் சஸ்பெண்ட்
கடந்த மாதம் இதே குருகிராம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சுசீலா திரிபாதியை அவர் வளர்த்த பிட் புல் ரக நாய் கடித்து குதறியுள்ளது. இதில் அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இந்த பிட் புல் ரக நாய் ஆபத்தான வளர்ப்பு பிராணி என்றும் வேட்டை நாய் என்பதால் இதை வளர்ப்பது அவ்வளவு உகந்தது அல்ல எனவும் விலங்கியல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.