பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி அச்சம் ஏற்பட்டு வரும் நிலையில் பல்வேறு நிகழ்வுகள் அதனை மேலும் அதிகரிக்க செய்து வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்கள் பெண் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் இப்பொழுது அரங்கேறியுள்ளது.
22 வயதான மெஹ்ரீன் ரியாஸ் திங்கள் கிழமை இரவு 8.30 மணியளவில் அவர் தங்கியுள்ள விடுதியில் இருந்து வெளியே செல்ல திட்டமிட்டுள்ளார். விடுதியில் இருந்து வெளியே வந்த அவர் கம்யூனிட்டி செண்டர் தூரம் என்பதால் ஆட்டோவில் செல்லலாம் என முடிவெடுத்துள்ளார்.
பின்னர் கம்யூனிட்டி செண்டருக்கு செல்லும் ஆட்டோவில் ஏறியுள்ளார். அங்கு சென்றதும் ஆட்டோ டிரைவருக்கும் இவருக்கும் இடையே காசு கொடுப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் வாக்குவாதம் தொடரவே ஆத்திரம் அடைந்த ஆட்டோ ட்ரைவர் மெஹ்ரீன் ரியாஸை ஆட்டோவில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார்.
Read More : அனுமன்சிலை முன் பிகினி உடையில் நடந்த பெண் பாடிபில்டர்ஸ்.. பாஜக-வை கண்டிக்கும் காங்கிரஸ்
இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத மெஹ்ரீன் ரியாஸ் என்ன செய்வது என தெரியாமல் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். சட்டென்று ஆட்டோ ட்ரைவர் அந்த கூரிய ஆயுதத்தால் இளம்பெண்ணின் அடிவயிற்றின் வலது பக்கத்தில் தாக்கியுள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆட்டோ ட்ரைவர் தப்பி ஓடியுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆட்டோ ட்ரைவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். ஆட்டோ டிரைவரை அடையாளம் காணும் முயற்சியும் நடந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Delhi, India