Home /News /national /

இளம்பெண்ணின் ஆசை வார்த்தையை நம்பி விடுதிக்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

இளம்பெண்ணின் ஆசை வார்த்தையை நம்பி விடுதிக்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

மாதிரி படம்

மாதிரி படம்

தனக்கு நர்ஸ் வேலை வேண்டும் என வாலிபர் ஒருவரை தொடர்புகொண்டு பழகிய 28 வயது இளம்பெண், அவரை விடுதிக்கு அழைத்து பணம் பறித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India
    கேரளா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் வாலிபரிடம் ஆசை வார்த்தை பேசி விடுதிக்கு அழைத்து அங்கு அவரை கட்டிவைத்து அடித்து பணம் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் கேரளா மாநிலம் வைகோம் பகுதியைச் சேர்ந்த 34 வயது நபர் ஆவார். இவர் நர்சிங் சேவைகளுக்கான தொழில் நடத்தி வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் இவரிடம் ஹசினா என்ற 28 வயது இளம்பெண் தனக்கு நர்ஸ் வேலை வேண்டும் எனத் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் ஹசினா அந்த நபரிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு இனிக்க இனிக்க பேசி நம்பிக்கையை பெற்றுள்ளார். தொடர்ந்து தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

    பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்புகிறேன் என்றதற்கு ஹசினா நேரில் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி எர்ணாகுளம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஹசினாவை சந்திக்க பணத்துடன் சென்றுள்ளார் அந்த நபர். அப்போது, அந்த விடுதியில் இருந்த ஹசினாவின் கணவர் ஜிதின், உறவினர் அனாஸ் மற்றும் ஆன்ஷாத் ஆகிய மூவர் இளைஞரை சரமாரியாக தாக்கி கைகால்களை கட்டிப்போட்டு அடித்துள்ளனர்.

    இதையும் படிங்க: டீ-யில் விஷம் கலந்து தாயை கொன்ற மகள்... கூகுளில் ஐடியா தேடியதால் வசமாக சிக்கினார்

    அந்த இளைஞரிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம், செல்போன் மற்றும் ரூ.5,000 பணத்தை பறித்துள்ளனர். அத்தோடு விடாமல் இந்த விவகாரத்தை சமூக வலைத்தளத்தில் போட்டு உன்னை அவமானப்படுத்தி விடுவேன் என மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.30,000 தொகையை அனுப்ப வைத்துள்ளனர். பணம் நகைகளை பறித்தப்பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். முதலில் அவமானம் தாங்காமல் இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட நபர் வெளியே சொல்லவில்லை. பின்னர் மனம் மாறி அவர் காவல்துறையை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து காவல்துறை மோசடி செய்த பெண் ஹசினா அவரது கணவர் ஜிதின், இளைஞர் அன்ஷாத் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு இளைஞர் அனாஸை காவல்துறை தேடி வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Kerala, Robbery

    அடுத்த செய்தி