Home /News /national /

லாட்ஜில் காதலியுடன் தனிமையில் இருந்த சிறை கைதி.. உதவிய போலீஸ் மீது நடவடிக்கை

லாட்ஜில் காதலியுடன் தனிமையில் இருந்த சிறை கைதி.. உதவிய போலீஸ் மீது நடவடிக்கை

காதலியுடன் லாட்ஜில் உல்லாசமாக இருந்த கொலை குற்றவாளி

காதலியுடன் லாட்ஜில் உல்லாசமாக இருந்த கொலை குற்றவாளி

2009ஆம் ஆண்டு நடந்து கொலை வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்ற பச்சா கான் பெல்லாரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India
    கொலைக் குற்றத்திற்கு ஆளான நபர் தனது காதலியுடன் லாட்ஜில் தனிமையில் இருக்க  காவல்துறையினரே உதவிய சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெலாரி பகுதியைச் சேர்ந்தவர் பச்சா கான். 55 வயதான பச்சா கான் அந்த பகுதியின் பிரபல ரவுடியாவார். 2009ஆம் ஆண்டு நகழ்ந்த கொலை வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்ற பச்சா கான் பெல்லாரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன.

    இந்நிலையில், ஹூப்ளியைச் சேர்ந்த இர்பான் கான் என்பவரை கொலை செய்த வழக்கில் பச்சா கான் தார்வாட் பகுதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லாமல் அப்பகுதியில் உள்ள தனியார் லாட்ஜிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு,  தனது காதலியுடன் சிறிது நேரம் பொழுது கழிக்க வேண்டும் என காவல்துறையினரிடம்  பச்சா கான் கேட்டதாகவும் இவரின் கோரிக்கை ஏற்று போலீசார் அந்த தனியார் விடுதிக்கு காதலியை வரவழைத்து பச்சா கானையும் அழைத்து சென்றுள்ளனர். இருவரையும் தனியாக விட்டுவிட்டு லாட்ஜுக்கு வெளியே காத்திருந்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதி கமிஷனருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட லாட்ஜில் காவல்துறை அதிரடி ரெய்டு நடத்தினர்.

    இதையும் படிங்க: மருத்துவரை சரமாரியாக தாக்கிய முதலமைச்சர் மகள்.. வீடியோ வைரல்.. மிசோராமில் சம்பவம்

    அப்போது பச்சா கான் தனது காதலியுடன் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து பச்சா கான் மற்றும் அவரது காதலியை கைது செய்ததுடன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மூன்று காவல்துறையினரையும் கைது செய்துள்ளனர். மேலும், போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Karnataka, Police arrested

    அடுத்த செய்தி