உலகிலேயே பணக்கார கிராமம் குஜராத்தின் மாதாபர்: காரணம் என்ன?

மாதாபர் கிராமத்தில் 17 வங்கிகள்.

குஜராத்தின் மாதாபர் கிராமம் உலகிலேயே பணக்கார கிராமமாகத் திகழ்கிறது, இது குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ளது.

 • Share this:
  குஜராத்தின் மாதாபர் கிராமம் உலகிலேயே பணக்கார கிராமமாகத் திகழ்கிறது, இது குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ளது.

  இந்தக் கிராமத்தில் 17 வங்கிகள் உள்ளன. சுமார் 7,600 வீடுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் குடும்பத்தினரின் மொத்த டெபாசிட் தொகை ரூ.5,000 கோடியாகும்.

  தனிநபர் சராசரி டெபாசிட் ரூ.15 லட்சமாகும். 17 வங்கிகளைத் தவிர இங்கு வேறு அனைத்து வசதிகளும் உள்ளன, பள்ளிகள், மருத்துவமனைகள், ஏரிகள், கல்லூரிகள், அணைக்கட்டுகள், கோயில்கள் அனைத்தும் உள்ளன. பசுக்கள் வளர்ப்பிடமும் உண்டு.

  குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் அருகே அமைந்துள்ளது மாதாபர் கிராமம். இந்த மாவட்டம் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம். அதிலும் வரலாற்று ரீதியாக, பல காலமாக கை வேலைப்பாடுகள், கட்டுமான பணிகள் செய்யும் மக்கள் வசிக்கும் மாவட்டம் ஆகும். கட்ச் மாவட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் இவர்களை "மேஸ்திரிஸ் ஆப் கட்ச்" என்று அழைப்பார்கள். இந்த மேஸ்திரிஸ் ஆப் கட்ச் இப்போது ஒரு இனமாகவே மாறிவிட்டது.

  முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் மதாபர் கிராமத்தில் மக்களின் முக்கிய தொழில் கட்டுமான துறை, டைல்ஸ் பதிப்பது போன்ற இன்டிரியர் வேலைகள்தான். இந்தியாவிலேயே.. ஏன் உலகிலேயே இதுதான் பணக்கார கிராமம். வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் இந்த கிராமத்தை பணக்கார கிராமம் என்று வரையறுக்கிறார்கள். இந்த கிராமத்தில் மட்டும் மொத்தம் 17 வங்கிகள் உள்ளது.

  சரி! என்ன காரணம்:

  இந்த கிராமத்தில் வசிப்பவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் அயல்நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள் என்று வசிக்கின்றனர், பெரும்பாலும் படேல் சமூகத்தினர்தான் இங்கு வசிக்கின்றனர், இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் 65% மக்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான்.

  இவர்கள் வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இவர்களில் பலர் வெளிநாடுகளிலிருந்து திரும்பி இந்தியா வந்து வர்த்தகம் தொடங்கியவர்கள்.

  சிலபல அறிக்கைகளின் படி மாதாபர் கிராம கூட்டமைப்பு ஒன்று லண்டனில் 1968-ல் தொடங்கப்பட்டது. இதன் கிளை ஒன்று மாதாபூரிலும் தொடங்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அயல்நாட்டில் வசித்தாலும் தங்கள் பணத்தை இந்தியாவில்தான் இவர்கள் சேமிக்கின்றனர். குறிப்பாக கிராம வங்கிகளில்தான் சேமிக்கின்றனர். விவசாயம்தான் மாதாபூரின் தொழில், இங்கிருந்து விளைபொருட்கள் மும்பைக்கு அனுப்பப்படுகின்றன.
  Published by:Muthukumar
  First published: