கொரோனா பாதிப்பில் கதிகலங்க வைக்கும் மகாராஷ்டிரா!

கொரோனா

மும்பையில் மட்டும் 1,539 பேருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது, மேலும் 5 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 13,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த மகாராஷ்டிர மாநிலத்தில், தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாத தொடக்கம் முதல் அங்கு மீண்டும் பரவல் கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக நாள் ஒன்றுக்கு 10,000 என்ற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 13, 659 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. மும்பையில் மட்டும் 1,539 பேருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது, மேலும் 5 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மும்பையில் கொரோனா காரணமாக 229 கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன, அதிக வாய்ப்புள்ளவர்களாக கண்டறியப்பட்ட 8,855 பேரின் தொடர்புகள் கண்காணிக்கப்பட்டுள்ளன, 25 பகுதிகள் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றனர்.

அதிர வைத்த பிரேசில்:

இந்த நிலையில் பிரேசியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,972 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஒரு நாள் இறப்புகளின் அடிப்படையில் இது புதிய சாதனை அளவாகும். அதே நேரத்தில் பிரேசியில் கடந்த 24 மணி நேரத்தில் 70,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 11.12 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதே போல பிரேசிலில் 168,370 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
Published by:Arun
First published: