முகப்பு /செய்தி /இந்தியா / 2022 தேர்தல் முடிவுகள்: இமாச்சல பிரதேச அரசியலில் குறைந்து வரும் அரச குடும்ப ஆதிக்கம்

2022 தேர்தல் முடிவுகள்: இமாச்சல பிரதேச அரசியலில் குறைந்து வரும் அரச குடும்ப ஆதிக்கம்

இமாச்சலப் பிரதேச தேர்தல்

இமாச்சலப் பிரதேச தேர்தல்

இமாச்சலப் பிரதேச தேர்தலில் அரச குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர்களில் இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Himachal Pradesh, India

நடந்து முடிந்த இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கவுள்ளது.அம்மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 40 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ஆட்சியில் இருந்த பாஜக 25 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. மூன்று இடங்களை சுயேட்சை வென்றுள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 43.90 சதவீதம் வாக்கு கிடைத்த நிலையில், பாஜக 43 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் அடுத்தபடியாக ஆம் ஆத்மி 1.10 சதவீதம் வாக்குகள் பெற்றன. சுமார் 15 இடங்களில் 1,500க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். இது இரு கட்சிகளுக்கும் இடையேயான கடும் போட்டியை காட்டுகிறது.

மேலும், மற்றொரு முக்கிய அம்சமும் இந்த தேர்தலில் நிகழ்ந்துள்ளது. இமாச்சலப் பிரதேச அரசியலில் அரச குடும்பத்தின் தாக்கம் வெகுவாக இருக்கும். அம்மாநில அரசியலில் 40 ஆண்டுக்கால தாக்கம் செலுத்தி பல முறை முதலமைச்சராக இருந்த வீரபத்திர சிங் ராம்பூர் அரச குடும்பத்தை சார்ந்தவர் ஆவார். இவரின் மனைவி பிரதீபா சிங் கியோந்தால் அரச குடும்பத்தை சேர்ந்தவர். பிரதீபா சிங் மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

அதேவேளை இந்த தேர்தலில் அரச குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர்களில் இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். வீரபத்திர சிங்கின் மகன் விக்ரமாதித்தய சிங்கும், மற்றொரு அரச குடும்ப வேட்பாளருமான அனிருந்த சிங்கும் வெற்றி பெற்றனர்.

இதையும் படிங்க: குஜராத்தில் காங்கிரஸ் படுதோல்விக்கு ஆம் ஆத்மிதான் காரணம் - வெளியான புள்ளி விவரங்கள்!

6 முறை எம்எல்ஏவாக இருந்த அரச குடும்ப வேட்பாளரான ஆஷா குமாரி இம்முறை தோல்வியை தழுவியுள்ளார். அதேபோல், குல்லு ஹிதேஷ்வர் சிஹ் என்ற அரச குடும்ப வேட்பாளரும் தோல்வி அடைந்துள்ளார். இதன்மூலம் இமாச்சல் அரசியில் அரச குடும்பத்தின் தாக்கம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Election 2022, Himachal Pradesh