தொடர்ந்து மூன்றாவது பேரிழப்பு... மத்திய அரசின் உதவி கோரும் கேரளா!

’கடந்த இழப்புகளின் போது வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் உதவி அதிகம் கிடைத்தது’.

தொடர்ந்து மூன்றாவது பேரிழப்பு... மத்திய அரசின் உதவி கோரும் கேரளா!
பினராயி விஜயன்
  • Share this:
கேரள மாநிலம் தொடர்ந்து மூன்றாவது பேரிழப்பைச் சந்தித்து வருவதால் மத்திய அரசின் உதவி அதிகம் தேவைப்படுவதாக அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளா மாநிலம் மட்டும் தொடர்ந்து மூன்றாம் முறையாக ஒரு பேரிழப்பைச் சந்தித்து வருகிறது. முதலில் ஒக்கி புயல், அதைத்தொடர்ந்து நிபா வைரஸ், தற்போது கொரோனா வைரஸ். தொடர் இழப்புகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு கூடுதல் உதவியை அளிக்க வேண்டும் என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கோரிக்கை வைத்துள்ளார்.

‘மாநில அரசாலும் ஒரு அளவுக்கு மேல் செய்ய முடியவில்லை. தொடர் நெருக்கடிகளால் கஷ்டப்படும் மாநிலத்துக்குப் அதீத உதவியை மத்திய அரசு அளிக்க வேண்டும். மாநிலப் பொருளாதாரத்தை உயர்த்த 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது போதாது.


கடந்த இழப்புகளின் போது வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் உதவி அதிகம் கிடைத்தது. இதனால், கடும் சிக்கலின் போதும் மாநில பொருளாதார நிலையை ஓரளவு ஸ்திரப்படுத்த முடிந்தது. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பால வெளியிலிருந்து உதவி கிடைப்பது கடினம்.

தொடர்ந்து மக்களுக்கு பல உதவித்திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறோம். இத்தகைய சூழலில் மத்திய அரசின் உதவி இல்லையென்றால் மீள முடியாத சிக்கலில் மாநில அரசு வீழ்ந்துவிடும்’ என தாமஸ் ஐசக் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் பார்க்க: கொரோனா வைரஸ் பரிசோதனை ஆப்..! அனைவருக்குமான ரிலையன்ஸ் MyJio!
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்