Home /News /national /

சபரிமலையில் மகர ஜோதி: ஐயப்ப சரண கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் மகர ஜோதி: ஐயப்ப சரண கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்!

கொரோனா விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தபோதும், மகரஜோதி தரிசனத்தற்காக மட்டும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் கேரளஅரசும் அதிக அளவில் பக்தர்களை அனுமதித்துள்ளது.

கொரோனா விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தபோதும், மகரஜோதி தரிசனத்தற்காக மட்டும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் கேரளஅரசும் அதிக அளவில் பக்தர்களை அனுமதித்துள்ளது.

கொரோனா விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தபோதும், மகரஜோதி தரிசனத்தற்காக மட்டும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் கேரளஅரசும் அதிக அளவில் பக்தர்களை அனுமதித்துள்ளது.

    சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தோன்றியதை அடுத்து மலைகளில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் தை முதல் நாள் மகர விளக்கு பூஜை திருவிழா கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், ஐயப்பனே ஜோதி வடிவில் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.

    இதனால் கொரோனா விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தபோதும், மகரஜோதி தரிசனத்தற்காக மட்டும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் கேரளஅரசும் அதிக அளவில் பக்தர்களை அனுமதித்துள்ளது. அதன் காரணமாக சபரிமலையில் இன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். சபரி மலை சன்னிதானம் மட்டுமின்றி, பம்பா, நீலிமலை உள்ளிட்ட அனைத்து மலைப்பகுதிகளிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.

    Also read:  கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் விடுவிப்பு.. குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோல்வி!

    மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து, இன்று சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்கத்தினால் ஆன திரு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பந்தள ராஜகுமாரணாக அரசக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடரந்து, இன்று மாலை தீபாராதனை தொடங்கியது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    அப்போது வானில் மகர நட்சத்திரமாக ஐயப்பன் தோன்றியதாக ஐதீகம். அதேநேரத்தில் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி பிரகாசமாக தோன்றியது. அது ஐயப்பனின் ஜோதிவடிவம் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஜோதியின்போது, சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷங்களால் விண்ணை முட்டியது.

    சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து மகர ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் படிக்க: உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பெண்ணின் தாயை வேட்பாளராக்கிய காங்கிரஸ்!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Kerala. Sabarimala, Sabarimala Ayyappan, Sabarimala Temple

    அடுத்த செய்தி