Home /News /national /

ரஃபேல் விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ரஃபேல் விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி நாடாளுமன்றம்

டெல்லி நாடாளுமன்றம்

  • News18
  • Last Updated :
    ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்றுத் தொடங்கியது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அமைச்சர் அனந்த் குமார் ஆகியோர் மறைவுக்குப் பின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடியதும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சுனில் குமார் ஜாக்கர் வலியுறுத்தினார். ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக சிவசேனா எம்.பி. சந்திரகாந்த் காரே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

    இதேபோல, சிபிஐ தவறாக பயன்படுத்துவதாகக் கூறி ராஷ்ரீடிய ஜனதாதள தலைவர் ஜெ.பி.யாதவும் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார். ரஃபேல் மற்றும் ராமர்கோவில் விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

    நண்பகல் 12 மணிக்கு மக்களவை கூடியதும், உறுப்பினர்கள் சிலரின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். மேலும், அணை பாதுகாப்பு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பிஜூ ஜனதா தள எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டு விசாரணை கோரி தொடர்ந்து முழக்கமிட்டனர். அமளி அதிகரித்ததால், அவையை நாள் முழுவதும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

    மாநிலங்களவை இன்று கூடியதும், மேகதாது அணை கட்டுவதற்கான அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல அன்றாட அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஆனந்த் சர்மா நோட்டீஸ் அளித்தார். உறுப்பினர்களின் அமளி நீடித்ததால் அவை முதலில் நண்பகல் வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Parliament, Rafeal Scam

    அடுத்த செய்தி