மும்பையில் 5,000.. டெல்லியில் 1,200... உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு!

கொரோனா

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
மகாராஷ்டிரா, தமிழகம், பஞ்சாப், கர்நாடகம் என நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்தியாவின் கொரோனா தலைநகராக மகாராஷ்டிரா உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு நோய்த்தொற்றால் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 30,760 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மும்பையில் கொரோனா பாதிப்பு 5,000 என்ற அளவை கடப்பது இதுவே முதல் முறையாகும்.

மும்பையில் கடந்த ஞாயிறன்று அங்கு 3,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது, திங்கட்கிழமை 3260 பேருக்கும், நேற்று 3,512 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.

இதனிடையே மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31,855 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 95 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மற்றொரு மெட்ரோ நகரமான டெல்லியில் இன்று 1,254 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி தான் இந்த அளவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதன் மூலம் அங்கு நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,890 ஆக உயர்ந்தது.

பஞ்சாப்பிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,634 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1023 பேர் குணமடைந்துள்ள நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 633 பேருக்கும், செங்கல்பட்டில் 178 பேருக்கும், கோவையில் 133 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,71,440 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: