வீரத்தை பார்த்து நாடே பெருமை கொள்கிறது...! அபிநந்தனுக்கு குவியும் வாழ்த்துகள்

அபிநந்தனின் அற்புதமான வீரத்தால், நாடே பெருமைகொள்கிறது. வந்தே மாதரம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வீரத்தை பார்த்து நாடே பெருமை கொள்கிறது...! அபிநந்தனுக்கு குவியும் வாழ்த்துகள்
அபிநந்தனுக்கு குவியும் வாழ்த்துகள்
  • News18
  • Last Updated: March 2, 2019, 8:52 AM IST
  • Share this:
பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கப்பட்ட அபிநந்தனுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடு கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவ நிலைகளை குண்டுவீசி தாக்க பாகிஸ்தான் போர் விமானங்கள் முயற்சி மேற்கொண்டன.

அந்த விமானங்களை இந்திய விமானப்படையின் சுகோய், மிக் ரக போர் விமானங்கள் விரட்டியடித்தன. இதில் ஏவுகணையை சுமந்து வந்த பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை, மிக் 21 விமானத்தில் இருந்து சுட்டு வீழ்த்தினார் இந்திய விமானப்படை விமானியான விங் கமாண்டர் அபிநந்தன்.




இதையடுத்து பாகிஸ்தான் விமானம் தாக்கியதில் அபிநந்தனின் விமானமும் சேதம் அடைந்ததால் பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கினார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்தனர்.

நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்ததையடுத்து அவர் நேற்று விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த அபிநந்தனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அபிநந்தனுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் மேலும், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின.

ட்விட்டரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள பதிவில், ‘விங் கமாண்டர் அபிநந்தனை தாய்நாட்டுக்கு வரவேற்கிறேன். உங்களது வீரம், பணியாற்றிய விதம், அனைத்துக்கும் மேலாக உங்களது கவுரவம் ஆகியவற்றால் இந்தியா பெருமைகொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.



பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'அபிநந்தனின் அற்புதமான வீரத்தால், நாடே பெருமைகொள்கிறது. 130 கோடி இந்தியர்களை ஊக்குவிக்கும் வகையில் நமது பாதுகாப்புப் படைகள் திகழ்கிறது. வந்தே மாதரம் என்று தெரிவித்துள்ளார்.



விங் கமாண்டர் அபிநந்தனைப் பார்த்து ஒட்டுமொத்த தேசமும் பெருமைகொள்கிறது. உங்களுடைய வீரத்தை பார்த்து இந்தே நாடே உங்களை பாராட்டுகிறது என்றுரு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



உங்களுடைய வீரத்தை பார்த்து இந்தே நாடே உங்களை பெருமை கொள்கிறது. நீங்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்ததில் மகிழ்ச்சி. உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கும் தேவை. உங்களுடைய எதிர்காலத்திற்கு வாழ்த்துகள் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.



இதேபோல, அபிநந்தனின் வீரம் நம் அனைவரையும் பெருமையடைய வைத்துள்ளதாகவும், அதிக அன்புடன் வரவேற்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



நாட்டு மக்களோடு சேர்ந்து தாமும் அபிநந்தனை வரவேற்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



Also watch

First published: March 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading