நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் 25 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 7- ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் டிசம்பர் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 23 நாள்கள் நடைபெறும் இந்த தொடரில் வர்த்தக முத்திரைகள் திருத்த மசோதா, பொருட்களின் புவியியல் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்பு திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏவுகணை சோதனை : இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்த சீன கண்காணிப்பு கப்பல்..!
கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலத் ஜோஷி, காங்கிரஸின் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, திமுகவின் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய சீன எல்லைப்பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, ஒரே நாளில் தேர்தல் ஆணையரை நியமித்தது, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதி பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இதனிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எப்படி செயல்படுவது என்பது குறித்து தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி எம்பிக்களின் ஆலோசன கூட்டமும் நடைபெற்றது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Parliament Session