முகப்பு /செய்தி /இந்தியா / குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே கடும் அமளி... 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்

குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே கடும் அமளி... 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மாநிலங்களவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியதே. முதல் நாளிலேயே மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து கண்ணிய குறைவாக நடந்துகொண்டதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

குளிர்காலக் கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று கூடியது. பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தபடி வேளாண் சட்டம் ரத்து மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் மாநிலங்களையிலும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், எவ்வித விவாதமும் இல்லாமல் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

குறிப்பாக மாநிலங்களவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து மாநிலங்களவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி,நாடாளுமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இளமாறன் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினாய் விஸ்வாம்,

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூலோ தேவி நேதம், சாயா வர்மா, ஆர் போரா, ராஜாமணி படேல், சையத் நசீர் உசேன், அகிலேஷ் பிரசாத் சிங், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தடோலா சென் & சாந்தா சேத்ரி, சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி  மற்றும்  அனில் தேசாய் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார்.

இதையும் படிங்க: வேளாண் சட்டங்கள் ரத்து : மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

இதையடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்து ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உத்தரவிட்டார்.

First published:

Tags: MP, Parliament Session, Rajya sabha MP