ஹோம் /நியூஸ் /இந்தியா /

காளை மாட்டில் பால் கறந்துள்ளோம்.. குஜராத் வெற்றி குறித்து கெஜ்ரிவால் பெருமிதம்!

காளை மாட்டில் பால் கறந்துள்ளோம்.. குஜராத் வெற்றி குறித்து கெஜ்ரிவால் பெருமிதம்!

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தில் 5 சீட்டுகள், 14 சதவீதம் வாக்குகள் பெற்று நாங்கள் காளை மாட்டில் பால் கறந்துள்ளோம் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அவர்கள் மத்தியில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், " கடந்த ஓராண்டில் நாம் பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றினோம். டெல்லி மாநகராட்சியை வென்றோம். கோவாவில் இரு எம்எல்ஏக்கள் ஜெயித்தார்கள். குஜராத்தில் 5 எம்எல்ஏக்கள், 13 சதவீத வாக்குவங்கியை பெற்றோம். இதில் குஜராத்தில் பெற்ற வெற்றி சாமானியமானது அல்ல. சிலர் என்னிடம், நீங்கள் குஜராத்தில் பால் கறக்கும் காளையை எடுத்து வந்துள்ளீர்கள் என பாராட்டினர். அந்த அளவுக்கு கடினமான வெற்றி இது.

பசுவில் பால் கறக்க அனைவராலும் முடியும். ஆனால், குஜராத்தில் 5 சீட்டுகள், 14 சதவீதம் வாக்குகள் பெற்று நாங்கள் காளை மாட்டில் பால் கறந்துள்ளோம். இதற்காக குஜராத் மக்களுக்கு நன்றி. எனவே கட்சியினர் கவலைப்பட வேண்டாம், 2027இல் நாம் குஜராத்தில் நிச்சயம் ஆட்சி அமைப்போம்" என்றுள்ளார்.

இதையும் படிங்க: ''கால்பந்து மாதிரிதான்.. தடையாக இருந்த அரசுக்கு ரெட் கார்டு'' - பிரதமர் மோடி பேச்சு

182 இடங்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி மெகா வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அதேவேளை, புதுமுகமாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களில் வென்றது. இந்த முறைதான் குஜராத் தேர்தல் களமானது பாஜக-காங்கிரஸ் என்ற நேரடி போட்டியில் இருந்து மும்முனை தேர்தல் களமாக இருந்தது.

First published:

Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, Gujarat, Gujarat Assembly Election