தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது - நாளை வழங்கப்படுகிறது

news18
Updated: August 14, 2019, 10:41 AM IST
தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது - நாளை வழங்கப்படுகிறது
அபிநந்தன்
news18
Updated: August 14, 2019, 10:41 AM IST
பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிந்தனுக்கு வீர் சக்ரா விருது, சுதந்திர தினத்தை ஒட்டி நாளை வழங்கப்படுகிறது.

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

விமானப்படையினரின் இந்த தாக்குதலின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானின் பிடியில் சிக்கினார். தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் சென்ற விமானம் பாகிஸ்தான் எல்லையில் நொறுங்கி விபத்துக்குள்ளானது.


இதனை அடுத்து, 2 நாட்களில் அவர் இந்தியாவுக்கு திரும்பி அனுப்பிவைக்கப்பட்டார். இந்த நிலையில், அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது சுதந்திர தினத்தை ஒட்டி நாளை அளிக்கப்பட உள்ளது.

மேலும், விமானப்படையின் ஸ்குவாடன் லீடர் மிண்டி அகர்வாலுக்கு யுவ சேவா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...