மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை மகாராஷ்டிரா முதலமைச்சரும் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்ரே கடுமையாக சாடியுள்ளார். சிவசேனா கட்சியின் 56 ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. கட்சியின் நிறுவன தினமான இன்று தொண்டர்களிடையே உத்தவ் தாக்ரே உரையாற்றினார்.
அவர் பேசுகையில், 'நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்துடன் மத்திய பாஜக அரசு விளையாடக்கூடாது. உங்களால் என்ன செய்ய இயலுமோ அதை மட்டுமே நீங்கள் வாக்குறுதியாகத் தர வேண்டும்.
அர்த்தமில்லாத திட்டத்திற்கு அக்னிவீர், அக்னிபத் என பெயர் வைக்க வேண்டாம். 17 முதல் 21 வயது இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் கழித்து என்ன செய்வார்கள். நாட்டின் ராணுவ வீரர்களை ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுப்பது ஆபத்தானது. நாளை அரசங்கத்தை கூட டெண்டர் மூலம் நீங்கள் தேர்வு செய்ய நினைப்பீர்கள். முதலமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளுக்கும் டெண்டர் விடுவீர்களா என்ன என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவர், இளைஞர்களுக்கு வேலை இல்லாமல், மனதில் கடவுளின் பெயரை ஜபிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. எனவே தான் எனது தொண்டர்களிடம் நம் மனதில் ராமரை வைத்துக்கொள்வோம், அதேவேளை உங்களுக்கு வேலையையும் உறுதி செய்து தருவோம் எனத் தொடர்ந்து கூறி வருகிறேன். முதலில் விவசாயிகளை வீதிக்கு வர வைத்து போராட வைத்தீர்கள் தற்போது இளைஞர்களை போராட வைத்துள்ளீர்கள். இது மிகவும் ஆபத்தானது' என்றார்.
இதையும் படிங்க: பறவை மோதியதால் நடுவானில் தீப்பிடித்த விமானம் - உள்ளூர்வாசிகள் பார்த்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
பீகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா, தெலங்கானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகாரில் மட்டும் 780க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Shiv Sena, Uddhav Thackeray