சிவசேனாவுடன் இணைந்து மஹாராஷ்டிராவில் வெற்றி பெறுவோம்! தேவேந்திரநாத் பட்னவிஸ் நம்பிக்கை

எந்தச் சந்தேகமும் இல்லை. தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுகுறித்து பரவும் வதந்திகளை நம்பவேண்டாம்.

சிவசேனாவுடன் இணைந்து மஹாராஷ்டிராவில் வெற்றி பெறுவோம்! தேவேந்திரநாத் பட்னவிஸ் நம்பிக்கை
பட்னவிஸ், உத்தவ் தாக்கரே
  • News18
  • Last Updated: September 21, 2019, 4:36 PM IST
  • Share this:
மஹாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் சிவசேனாவும், பா.ஜ.கவும் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திரநாத் பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடக்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திரநாத் பட்னவிஸ், ‘நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை சிவசேனாவுடன் இணைந்து சந்திக்கவுள்ளோம்.

அதில், எந்தச் சந்தேகமும் இல்லை. தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுகுறித்து பரவும் வதந்திகளை நம்பவேண்டாம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களிடம் அறிவிப்போம்’ என்று தெரிவித்தார்.


தங்களுடைய ஆட்சி குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியான விமர்சனம் குறித்து பேசிய பட்னவிஸ், ’நான் சாம்னா பத்திரிக்கையை வாசிக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சரவையின் சார்பில் எடுக்கப்பட்ட அத்தனை முடிவுகளும் சிவசேனா அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்தான்’ என்று விளக்கமளித்தார். அடுத்த முறையும் நீங்கள் முதல்வராக பதவியேற்பீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, அதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? என்று பதிலளித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ‘சிவசேனாவும், பா.ஜ.க தனித்தனியாக தேர்தலைச் சந்தித்தன. அதில், பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக 122 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனையடுத்து, இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்தன.

Also see:
First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading