“என்னை எதிர்த்தால் அரசைக் கவிழ்ப்பேன்” - பாஜகவுக்கு சுப்பிரமணிய சாமி மிரட்டல்

சுப்பிரமணியன் சுவாமி.

“நீதி பரிபாலனம், அரசியல் மற்றும் நம்பிக்கை” என்ற தலைப்பில் பேசிய அவர், அயோத்தி விவகாரம் தொடர்பாக பல முக்கிய விஷயங்களை குறிப்பிட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
என்னை எதிர்க்கும் துணிச்சல் மத்திய அரசுக்கும், உத்தரப்பிரதேச அரசுக்கும் இருக்கிறதா என்ன? அப்படி அவர்கள் எதிர்த்தால் அரசை கவிழ்ப்பேன் என்று பாஜக எம்.பி சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக் கருத்துக்களுக்கு பெயர் போன பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை நியமன எம்.பி.யுமான சுப்பிரமணியன் சாமி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

“நீதி பரிபாலனம், அரசியல் மற்றும் நம்பிக்கை” என்ற தலைப்பில் பேசிய அவர், அயோத்தி விவகாரம் தொடர்பாக பல முக்கிய விஷயங்களை குறிப்பிட்டார்.

இந்துத்துவ அமைப்புகளால் ராமர் கோவிலுக்காக கொண்டு வரப்பட்டுள்ள செங்கல்கள் (Image for representation/AFP)


“உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அயோத்தி வழக்கு அடுத்தாண்டு ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டால், இரண்டே வாரங்களில் நமக்கு வெற்றி கிடைக்கும். ஏனென்றால், எனது 2 எதிர்க்கட்சிகள் மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் தான்.என்னை எதிர்க்கும் துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதா என்ன? அப்படி அவர்கள் என்னை எதிர்த்தால் நான் அரசை கவிழ்ப்பேன். அவர்கள் அதை செய்ய மாட்டார்கள் என்று எனக்கு தெரியும்” என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also See..

Published by:Sankar
First published: